தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வற்றல் மிளகாய் 4
உளுத்தம்பருப்பு 2 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
பொட்டுக்கடலையை எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,வற்றல் மிளகாய்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் நான்கினையும் எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும்.
எல்லாவற்றையும் தேவையான உப்பு,தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
சாதாரணமாக நாம் பருப்பு துவையலில் துவரம்பருப்பும்,கடலைப்பருப்பும் சேர்ப்போம். ஆனால் இந்த துவையல் மிகவும் ருசியாக இருக்கும்.
சாதத்தில் சிறிது நல்லெண்ணையுடன் இந்த துவையலை பிசைந்து சாப்பிடவேண்டும்.
பொட்டுக்கடலையில் இரும்பு சத்து உள்ளது.
5 comments:
வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமையாக உள்ளது செய்து பார்க்கிறோம்
இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி ரூபன்.
எனக்கு மிகவும் பிடிக்கும்... இது போல் செய்து பார்க்கிறோம்... நன்றி...
வருகைக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.
பொட்டுக்கடலை துவையல் மிக அருமை. நானும் இந்த பதிவு எனது வலைப்பூவில் கொடுத்திருக்கிறேன். எனது வலைப்பூவுக்கும் தொடர்ந்து வருகை தந்து கருத்துக்களை சொல்லுங்கள்.
Post a Comment