தேவையானவை:
பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப்
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
------
கொள்ளு 1/4 கப்
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
பெருங்காயம் 1 துண்டு
-------
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
-----
செய்முறை:
கொள்ளை முதல் நாள் இரவே தண்ணீரில் உறவைக்கவேண்டும்.
கடலைபருப்பு,பொட்டுக்கடலை இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.
ஊறிய கொள்ளை வடிகட்டி அதனுடன் ஊறவைத்த கடலைபருப்பு,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல்,பெருங்காயம்
தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பின் அதை தட்டில் போட்டு உதிர்க்கவும். கட்டியாக இருந்தால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
பீன்ஸை Microwave bowl ல் வைத்து Microwave "H" ல் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.
வெளியே எடுத்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வேகவைத்த பீன்ஸ் யை சேர்க்கவும்.
அதனுடன் உதிர்த்த கொள்ளு பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.
பீன்ஸ் கொள்ளு பொரியலை சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
8 comments:
"தேங்காய் துருவல் இல்லாமல் செய்யலாமா...?" என்று வீட்டில் கேட்டார்கள்...
தேங்காய் துருவல் இல்லாமலும் செய்யலாம். தேங்காய் சேர்ப்பதால் சுவை சற்று கூடும். வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
வணக்கம்
செய்து பார்க்கிறோம் ....த.ம 3
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015: ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம் … வாருங்கள் … வாருங்கள் ...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுவையான சமையல் குறிப்பு! சத்தானதும் கூட! நன்றி!
@ரூபன்
வருகைக்கு நன்றி ரூபன்.
வருகைக்கு நன்றி ' தளிர்’ சுரேஷ்.
பீன்ஸ் கொள்ளு பொரியல் மிக அருமை.
Thanks Saratha.
Post a Comment