Wednesday, August 30, 2017

பனீர் புலவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி     1 கப்
பனீர் துண்டுகள் 15
வெங்காயம் 1
பட்டாணி   1/2 கப்
உருளைக்கிழங்கு 1
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
புதினா,கொத்தமல்லித்தழை   சிறிதளவு
நெய்  2 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய்    தேவையானது
-----
தாளிக்க:
பட்டை,லவங்கம்,ஏலக்காய்
--------------------
செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
வெங்காயம், உருளைக்கிழங்கு இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பனீர் துண்டுகளை வெந்நீரில்   அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் நெய்யில் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக  வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
----------
வாணலியில் சிறிது நெய்  வைத்து பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து  அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்

பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கு,பட்டாணி சேர்க்கவேண்டும். இஞ்சி பூண்டு விழுது தேவையான உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லிதழை சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
--------
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பாசுமதி அரிசியை வடிகட்டி 1 1/2 கப் தண்ணீருடன்  வைத்து அதனுடன் வதக்கிவைத்துள்ள காய்கறி கலவையை சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து புலவை எடுத்து  வறுத்த பனீரை சேர்த்து ஒரு கிளறு கிளறவேண்டும்.

பனீரில் புரத சத்தும்.சுண்ணாம்பு சத்தும் உள்ளது.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

5 comments:

கோமதி அரசு said...

நலமா? வெகு நாட்களாய் உங்கலை வலை பக்கம் பார்க்க முடியவில்லையே !
பனீர் புலவ் மிக நன்றாக இருக்கிறது.

Kanchana Radhakrishnan said...

நலம்.சிற்வர் நூல் ஒன்று எழுதி வருகின்றேன்.அதனால் வலைப்பக்கம் வர முடியவில்லை.
வ்ருகைக்கு நன்றி கோமதி அரசு.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.

நலம்தானே? ஆம், நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவு.

Kanchana Radhakrishnan said...

நலம்.சிறுவர் நூல் ஒன்று எழுதிகிறேன்,அதனால் வலைப்பக்கம் வரமுடியவில்லை.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...