Monday, February 16, 2009

கத்திரிக்காய் காரக்குழம்பு


தேவையானவை:

சிறிய பிஞ்சு கத்திரிக்காய் 15
சின்ன வெங்காயம் 10
பூண்டு 8 பல்
தக்காளி 2
---
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்
நல்லெண்ணைய் கால் கப்
---
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
---
அரைக்க:
தேங்காய் துருவல் அரை கப்
முந்திரி 8
----

செய்முறை:

சின்ன கத்திரிக்காயை குறுக்குவாட்டில் அரை அங்குலம் நறுக்கிக்கொள்ளவும்.(கத்திரிக்காய் முழு உருவில் இருக்க வேண்டும்)
சின்ன வெங்காயம்,பூண்டு இரண்டையும் உரித்துக்கொள்ளவும்.
தக்காளியை எண்ணைய் விட்டு பேஸ்டு போல வதக்கிக்கொள்ளவும்.
புளியை இரண்டுகப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,முந்திரி இரண்டையும் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
-----
வாணலியில் நல்லெண்ணைய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பின்னர் கத்திரிக்காய்,சின்ன வெங்காயம்,பூண்டு மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவும்.
செய்துவைத்த தக்காளி விழுதை போட்டு அதனுடன் ஒரு கப் தண்ணீர் ,உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.
புளியை நன்றாக கரைத்து விடவும்.
பின்னர் மஞ்சள்தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
எண்ணைய் பிரிந்து வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்

9 comments:

Anonymous said...

தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்சமையல் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Unknown said...

//தேங்காய் துருவல் அரை கப்
முந்திரி 8//

இது தான் கார்டியாக் அரெஸ்ட்டை காசு கொடுத்து வாங்குறதுன்னு சொல்வாங்க....

கோவி.கண்ணன் said...

// KVR said...
//தேங்காய் துருவல் அரை கப்
முந்திரி 8//

இது தான் கார்டியாக் அரெஸ்ட்டை காசு கொடுத்து வாங்குறதுன்னு சொல்வாங்க....
//

:))) 30 வயது வரை ஒண்ணும் பிரச்சனை இல்லையே...அதுக்கும் மேல் தான் தேங்காய்...தலைக்கு ஆபத்து கொடுக்க துவங்கும்

Kanchana Radhakrishnan said...

நன்றி தமிழ்குறிஞ்சி

Kanchana Radhakrishnan said...

என்றாவது ஒரு நாளைக்கு வாய்க்கு ருசியாக சாப்பிடுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன் KVR

Kanchana Radhakrishnan said...

இந்த வலைப்பதிவுக்கு வரவும் நேரமிருக்கிறதா கோவி..வருகைக்கு நன்றி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவைப் படிச்சதும், காரக் குழம்பு கம கமக்குது!
அருமை!
சுய பாகத்துக்கு ஏற்ற குழம்பு!

Kanchana Radhakrishnan said...

நன்றி ஜோதிபாரதி sir

Swami said...

உங்க சமையல் குறிப்பு அருமை. ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். நம்ம மக்களுக்கு முந்திரி,தேங்காய் என்றாலே கொழுப்பு சத்து என்ற எண்ணம் உள்ளது. மிதமாய் சேர்த்துக்கொண்டால் ,இவை நல்லதே. தேங்காயை கொதிக்க விடாமல் கலந்தால் நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்லெண்ணையும் (குட் choletesterol ) நல்ல கொழுப்பு உள்ளதே. பிஸ்ஸாவையும்,கோக்கையும் உள்ளே தள்ள அஞ்சாத நம் மக்கள் நம் பாரம்பரிய உணவுகளை பற்றிய தெளிவே இல்லாமல் இருப்பது வேதனை.
.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...