பங்குனி மாதம் முதல்தேதி (14.3.2009) அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.
----
முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.
--
வெல்ல அடை:
தேவையானவை:
வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்
செய்முறை:
காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.
உப்பு அடை:
தேவையானவை:
வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை
செய்முறை:
காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.
6 comments:
பச்சரிசி அடை செய்தது இல்லை. புதுசா இருக்கு, முயற்சிக்கனும். குறிப்புக்கு நன்றி. அடுத்த பதிவர் சந்திப்பு நல்ல பலகாரம்.
கேழ்வரகு அடை காரம், இனிப்பு என செய்திருக்கிறோம்
இது வீடுகளில் வழக்கமாய் செய்வது போன்ற அடை இல்லை..நோன்பு அன்று செய்வது.வருகைக்கு நன்றி கோவி
இதுக்கு சைடு டிஷ் வெண்ணை. எனக்கு இந்த combination ரொம்ப பிடிக்கும்.
//kanchana Radhakrishnan said...
இது வீடுகளில் வழக்கமாய் செய்வது போன்ற அடை இல்லை..நோன்பு அன்று செய்வது.வருகைக்கு நன்றி கோவி
//
சிறுவனாக இருக்கும் போது அக்கம் பக்கம் பெண்களெல்லாம் ஒருவீட்டில் எதோ ஒரு செவ்வாய் இரவு செவ்வாய் பிள்ளையார்னு சொல்லி பச்சரிசி, தேங்காய் போட்டு அடை போன்று செய்வார்கள், அதை ஆண்களுக்கு கொடுக்கமாட்டார்கள், ஆண்களெல்லாம் தூங்கிய பிறகே செய்ய ஆரம்பித்து ஒன்றாக படையல் வைத்து படைத்துவிட்டு அவரவர் வீட்டுக்கு அவரவர் பங்குடன் செல்வார்கள். அந்த கொழுக்கட்டை/அடை சுவையாக இருக்கும்.
வருகைக்கு நன்றி மணிகண்டன்
//கோவி.கண்ணன் said...
கொழுக்கட்டை/அடை சுவையாக இருக்கும்.//
:-))))
Post a Comment