தேவையானவை:
சேமியா 2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
தக்காளி 3
பீன்ஸ் 15
காரட் 3
பச்சை பட்டாணி 1/2 கப்
-----
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை .
----
எண்ணைய்,உப்பு தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
வெங்காயம்,பீன்ஸ்,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பச்சைமிளகாய்,துருவிய காரட்,பீன்ஸ்,பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும் காய்கறிகள்நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு
சேர்க்கவும்.தேவையான அளவு உப்புடன்,இஞ்சிபூண்டு விழுது,மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.
பொல பொல வென்று வந்ததும் இறக்கவும்.
5 comments:
//பச்சை பட்டாணி 1/2 கப்
//
படத்தைப் பார்த்தால் அரை கப் பச்சைப் பட்டாணியை என்ன செய்தீர்கள் என்றே தெரியவில்லை. காணும் :)
சேமியா புலாவுக்கு தேங்காய்ச் சட்டினி சைட் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்
படம் எடுக்கறதுக்கு முன்னாலே எல்லாவற்ரையும் TVR எடுத்து சாப்பிட்டுட்டார் கோவி.
:-))))
பாக்கவே அழகா இருக்கே!
சாப்பிட நல்லாத்தான் இருக்கும்!
//kanchana Radhakrishnan said...
படம் எடுக்கறதுக்கு முன்னாலே எல்லாவற்ரையும் TVR எடுத்து சாப்பிட்டுட்டார் கோவி.
:-))))//
கிகிகிகி!
வருகைக்கு நன்றி ஜோதிபாரதி சார்
Post a Comment