தேவையானவை:
பால் 5 கப்
கோவா 100 gm.(sugarless)
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு தேவையானது
சர்க்கரை 100 கிராம்
குங்குமப்பூவை வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
செய்முறை:
ஒரு கனமான அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் கோவாவையும் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.
விடாமல் கிளற வேண்டும். 15 நிமிடம் ஆகும். பாலும் கோவாவும் நன்றாக திக்கானவுடன் சர்க்கரை சேர்க்கவேண்டும்.
அடுப்பை slim ல் வைத்து கிளற வேண்டும்.பின்னர் ஏலக்காய் பொடி,ஜாதிக்காய் பொடி,குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
நன்றாக கிளறி ஆறவைக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
நன்கு கையால் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி உள்ளங்கையால் round ஆக தட்டவும்.
பிஸ்தாபருப்பை மேலே வைத்து அமுக்கவும்.
3 comments:
எவ்வளவு சக்கரை ?
தட்டச்சும்போது விட்டுப்போயிற்று..இப்போது சேர்த்துவிட்டேன்..
ஆமாம்..கோவியிடம் தொலைபேசி எண்ணை வாங்கிவிட்டு...தமிழக விஜயம் போது ஏன்..பேசவில்லை..
சுற்றல் அதிகமாப்போச்சு. இன்னும் ரெண்டு மாதங்களில் இன்னொரு விஜயம் இருக்கு.
உங்களை வீட்டுலே வந்து சந்திப்பேன். கேஸர் பேடா கிடைக்கும்தானே? :-)))))
Post a Comment