Saturday, May 23, 2009

வறுத்த உப்புமா


தேவையானவை:

அரிசி மாவு 2 கப்
புளி எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் கால் கப்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
சிவப்பு மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

செய்முறை:

புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசி மாவுடன் உப்பு,மஞ்சள்தூள் கலந்து
வடிகட்டிய புளித்தண்ணீரை ஊற்றி பிசையவும். இட்லி மாவு பதத்திற்கு வரவேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,சிவப்பு மிளகாய்,பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் அரிசிமாவு கலவையை ஊற்றி நன்றாக கிளறவும்.
அடுப்பை slim ல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணைய் ஊற்றி கிளறவும்.
நன்றாக உதிரியாக வரும்.
இதை புளி உப்புமா என்றும் கூறுவார்கள்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

நாங்கள் இதை நல்ல புளித்த மோரில் கரைத்து, மோர்க்களி என்று ருசிப்போம்:)
அதில் பச்சை மிளகாய்க்க்ய் பதில் மோர் மிளகாய் தாளிப்போம்.
நன்றி புளி உப்புமாவுக்கு.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...