Wednesday, July 29, 2009

வெண்டைக்காய் மோர்க்குழம்பு

தேவையானவை:

வெண்டைக்காய் 10
தயிர் 2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு (ஆய்ந்தது)

அரைக்க:
துவரம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
துருவிய தேங்காய் 1/2 கப்
பச்சை மிளகாய் - 2

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

1.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2.இரண்டு கப் தயிரில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கடைந்து கொள்ளவும்.அதில் உப்பு,மஞ்சள்பொடி,பெருங்காயத்தூள்
ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும்.
3.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணிரில் ஊறவைத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து
பின்னர் வெண்டைக்காயை வதக்கவும்.
5.கடைந்து வைத்துள்ள மோர் கலவையை அரைத்து வைத்துள்ள விழுதுடன் சேர்த்து வாணலியில் ஊற்றவும்.
சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும்.
கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.

3 comments:

மணிகண்டன் said...

அருமையா வந்துச்சு. ஆனா, கொஞ்சம் திக்கா இருந்தது :)- தேங்க்ஸ்.

Kanchana Radhakrishnan said...

நன்றி மணிகண்டன்

வடுவூர் குமார் said...

இன்னிக்கு இது தான் மெனு- முயற்சித்து பார்க்கப்போகிறேன்.

அடை- செய்முறை எங்கியாவது இருக்கா என்று உங்கள் பதிவில் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...