Tuesday, September 15, 2009

முளைகட்டின சோயா பீன்ஸ் சுண்டல்





முளைகட்டின சோயா பீன்ஸில் புரோட்டின் அதிகம் உள்ளது.நார்ச்சத்தும் விட்டமின் சி யும் அடங்கியுள்ளது.

தேவையானவை:

சோயாபீன்ஸ் 1கப்
குடமிளகாய் 1
வெங்காயம் 1
காரட் 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
--
பொடி செய்ய:
தனியா 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்புமிளகாய் 2
--
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

சோயாவை முளைகட்டும் முறை"

சோயாவை 2 கப் தண்ணீரில் முதல்நாள் இரவு ஊறவைக்கவேண்டும்.அடுத்தநாள் அந்த தண்ணீரை எடுத்துவிட்டு
வேறு தண்ணீர் விட்டு ஊறவைக்கவேண்டும்.இது மாதிரி 2,3 தடவை செய்யவேண்டும்.இரண்டாம் நாள் இரவில் சோயாவை
தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு ஈரத்துணியில் வைக்கவேண்டும்.அடுத்தநாள் காலையில் ஒவ்வொரு சோயா பருப்பும் அழகாக
முளைகட்டியிருக்கும்.
---
செய்முறை:
குடமிளகாயை பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.
பொடிசெய்வதற்கு சொன்ன பொருட்களை லேசாக எண்ணையில் வறுத்து
பொடி செய்து கொள்ளவும்.
முளைகட்டி சோயா பருப்பை தண்ணீர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.வடிகட்டவும்.
வாணலியை எடுத்துக்கொண்டு எண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய்
சேர்த்துவதக்கவும்.
குடமிளகாய்,துருவிய காரட் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
வேகவைத்த சோயா பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியில் பொடி செய்த பொடியை தூவவும்.

7 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

உங்கள் பதிவு தெளிவாகவும், விளக்கமாகவும் உள்ளது .......

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் ..............

Radhakrishnan said...

சாதாரண சுண்டலுக்கும் இதே போன்று செய்யலாமா அம்மா?

பாசகி said...

அருமையான டிஷ் :)

மேடம், அந்த முளை கட்டற பார்ட் மட்டும் எனக்கு புரியமாதிரி சொல்லமுடியுமா? லைக்,

- ஒரு டம்ளர் சோயாக்கு இரண்டு டம்ளர் தண்ணீங்களா?

- அடுத்த நாள்னா, இன்னிக்கு நைட் 10 மணிக்கு ஊறவைச்சா நாளைக்கு காலைல ஒரு 8 மணிக்கு தண்ணி மாத்தணுங்களா?

- 2,3 மூணு தடவைனா எவ்ளோ நேர இடைவெளிலங்க?

- இரண்டாம் நாள்னா, 24hrs கழிச்சுங்ளா?

- ஈரத்துணியை தட்டுல வைச்சா போதுமா இல்லை பாத்திரத்துல ஊற வைக்கணுங்ளா?

- அப்புறம், பச்சைபயிறு இன்னபிற பயிறு வகைகளுக்கும் இதே செய்முறைதானுங்களா?

நான் சுண்டல் செய்யபோறதில்லை. முளை கட்டுன பயிறை அப்படியே சாப்பிடப்போறேன். எவ்ளோ நாள்/நேரம் கெடமா இருக்கும்?

சாரி மேடம், ரொம்ப படுத்திட்டேன்னு நினைக்கறேன் :)

Kanchana Radhakrishnan said...

புரியும்படியாகவே சொல்கிறேன்..பாசகி
வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில்..ஒரு கப் சோயாவிற்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.சனிக்கிழமை காலை 8 மணியளவில் நன்றாக வடிகட்டிவிட்டு வேறு தண்ணீர் , அதே அளவிற்கு ஊற்றவேண்டும்.நான்கு மணி நேரத்திற்கு ஒரு தடவை தண்ணீரை மாற்றவும்..இதனால் சோயாவின் வாடையும் சற்று குறையும்.சனிக்கிழமை இரவு..ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் பிழிந்த ஈரத்துணி(மெல்லிய டவல்) ஒன்றைப் போட்டு அதில் வடிகட்டிய சோயாவைப் போட்டு..அந்த துணியாலேயே மூடவும்.ஞாயிறு காலை சோயா முளைகட்டியிருக்கும்.எல்லாப் பயிறு வகைகளையும் இப்படி செய்யலாம்.
ஒரு உபரி செய்தி...இது உடலில் சக்கரையை கட்டுப்படுத்தும்

Kanchana Radhakrishnan said...

நன்றி உலவு.

Kanchana Radhakrishnan said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
சாதாரண சுண்டலுக்கும் இதே போன்று செய்யலாமா அம்மா?//


செய்யலாம்..எல்லாப் பயிறு வகைகளையும் இப்படி செய்யலாம்.வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்

பாசகி said...

விரிவான பதில்களுக்கு ரொம்ப நன்றி மேடம்.

நாலு மணிநேரத்துக்கு ஒரு முறை மாத்தணும்னா Sunday-தான் செய்யமுடியும். எவ்ளோ நாள்/நேரம் கெடமா இருக்கும்?-னு சொல்லலியே :)

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...