
பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.
பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
குழந்தைகளுக்கு பப்பாளிப்பழம் கொடுத்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
பல் எலும்பு போன்றவை வலுவடையும்.
பப்பாளியை உணவில் சேர்த்துக்கொண்டால் தேவையற்ற சதைகள் குறையும்.
(பப்பாளி கூட்டு பண்ணலாம்)
பப்பாளியின் பாலை புண் உள்ள இடங்களில் பூசினால்குணமாகும்.
பப்பாளி இலையை அரைத்து பூசினால் கட்டி உடையும்.வீக்கமும் குறையும்.
பிரசவமான பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்கு சுரக்கும்.
பப்பாளி விதையை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
நன்கு பழுத்த பழத்தை கூழ் போல பிசைந்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி வர முக சுருக்கம் மாறி
முகம் பொலிவு பெறும்.
4 comments:
அனைத்தும் நல்ல பயனுள்ள குறிப்பு!!
பப்பாளிக்காய் கூட்டு செய்து பார்த்திருக்கிறேன்,கனிந்த பழத்தை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பளிச்சிடும் என்பது மிகச் சரியே .பப்பாளிப் பழம் மாம்பழம் போல சூட்டைக் கிளப்பக் கூடியது என்று கேள்விப பட்ட ஞாபகம். நல்ல இடுகை.
வருகைக்கு நன்றி Menaga
வருகைக்கு நன்றி Mrs.Dev
Post a Comment