தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப் (அரைத்த விழுது)
சர்க்கரை 1 கப்
நெய் 1/4 கப்
குங்குமப்பூ சிறிது (optional)
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Lemon yellow colour 1/2 டீஸ்பூன்
செய்முறை:
பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு அரைமணிநேரம் மூடிவைக்கவேண்டும்.பின்னர் அதனை எடுத்து தோலுரித்து சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
அடுப்பில் சற்று அடி கனமான பாத்திரத்தை வைத்து பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.உருட்டுகிற பதம் வருகிறவரை கிளறவேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாதாம் பருப்பு விழுது,சர்க்கரை கலவையில் நெய் சேர்த்து கிளறவேண்டும்.(அடுப்பு எரியும்போதே நெய் ஊற்றி கிளறினால் அல்வாவின் நிறம் மாறிவிடும்)அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
அல்வாவில் ஏலப்பொடி,குங்குமப்பூ,lemon colour சேர்க்கவண்டும்.
9 comments:
நன்றி தமிழினி
very nice halwa!!
ஆஹா !
அருமையான பதிவு!!
Thanks Menaga
நன்றி
ரேஷன் ஆபீசர்
ஏனுங்க பால் எல்லாம் சேர்க்க வேணாங்களா??
பால் சேர்க்கவேண்டாம்.வருகைக்கு நன்றி Prasanna Rajan
அருமையான பதிவு!! நன்றி
வருகைக்கு நன்றி prabhadamu
Post a Comment