தேவையானவை:
மைதாமாவு 1 கப்
கோதுமைமாவு 1 கப்
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
------
காரட் 2
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
----
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:
மைதாமாவையும்,கோதுமைமாவையும் சிறிது வெண்ணைய்,உப்பு,தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் துருவிய காரட்,மசித்த உருளைக்கிழங்கு,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
தனியாதூள்,மிளகாய்தூள் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவேண்டும்.கலவை சற்று கெட்டியாக இருக்கவேண்டும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாக இடவும்.
ஒரு சப்பாத்தி மேல் தயாராக உள்ள காரட் கலவையை பரவலாகப் போட்டு அதன் மேல் இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை ஒட்டி தோசை தவாவில் போட்டு இறுபுறமும் சிவந்ததும் எடுக்கவும்.
12 comments:
புது ரெசிபியாக இருக்கு அருமை.
சூப்பராக இருக்கின்றது...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...நன்றி
ரொம்ப சத்தானா ஆலு பரோட்டா போல் கேரட் பரோட்டாவா?
Thanks Menaga
செய்து பாருங்கள்.நன்றி Geetha.
நன்றி Jaleela
Wow! very innovatice recipe..yummy yummy..
migavum arumai.. oru murai enathu thalathirku varungal.. following you
Thanks Nithu Bala
நன்றி Srividhya Ravikumar
healthy delicious parota
நன்றி Aruna Manikandan
Post a Comment