Monday, April 26, 2010

பீட்ரூட் போளி



தேவையானவை:

பீட்ரூட் 1கப்(துருவியது)
தேங்காய் 1 கப் (துருவியது)
வெல்லம் 1 கப் (பொடித்தது)
பொட்டுக்கடலை 1 கப்
வெள்ளை எள் 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் 3
---
மைதாமாவு 1 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



மைதாமாவை சலித்து உப்பு,எண்ணைய்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.ஒரு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

பீட்ரூட் துருவல்,தேங்காய் துருவல் இரண்டையும் ஒரு பேப்பரில் பரவலாக போட்டு காய வைக்கவும்.

ஏலக்காயை வெறும் வாணலியில் வறுத்து அதனுடன் பொட்டுக்கடலை,எள் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் பொடி பண்ணவும்.

வெல்லத்தை சிறிது தண்ணீருடன் ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைக்கவும்.கம்பிப் பாகு வந்ததும் காய வைத்துள்ள பீட்ரூட் துருவல்,தேங்காய் துருவல் இரண்டையும் கொட்டி கிளறவும்.
பின்னர் பொட்டுக்கடலை பொடியை தூவி கிளறவும்.கொழுக்கட்டை பூரணம் மாதிரி வரும்.

மைதாமாவை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்திக்கு இடுவதுபோல இட்டு பீட்ரூட் பூரணத்தை உள்ளே வைத்து மூடி கையால் தட்டவும்.ஒவ்வொரு உருண்டையையும் இது மாதிரி செய்யவேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை போட்டு சிறிது நெய் விட்டு ஒவ்வொரு போளியாக போட்டு இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுக்கவேண்டும்.

குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்..

11 comments:

Ananya Mahadevan said...

வித்தியாசமான போளி. சூப்பர் போங்க..

Srividhya Ravikumar said...

மிகவும் அருமையான ரெசிபி.. நன்றி..

Aruna Manikandan said...

Nice innovative idea..
Thx. for sharing

Jaleela Kamal said...

சூப்பர் ஐடியா சூப்பர் போளி.

Menaga Sathia said...

வித்தியாசமான போளி சூப்பர்!!

GEETHA ACHAL said...

பீட்ருட் போளி சூப்பர்ப்...அருமையான ஐடியா...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அநன்யா மஹாதேவன்.

Kanchana Radhakrishnan said...

Thanks Srividhya Ravikumar.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Jaleela

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
Aruna Manikandan.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Thalaivan

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...