Thursday, April 29, 2010

வேப்பிலைக் கட்டி

எலுமிச்ச இலை


நார்த்த இலை



தேவையானவை:

நார்த்த இலை 1 கப்
எலுமிச்சை இலை 1 கப்
கறிவேப்பிலை 1/2 கப்
மிளகாய் வற்றல் 10
ஓமம் 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் சிறிது
உப்பு தேவையானது

செய்முறை:


எலுமிச்ச இலையையும் நார்த்த இலையையும் நன்றாகக் கழுவி துடைத்து நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.(இலைகளை microwave oven ல் ஒரு microwave plate ல் பரப்பி 10 sec. வைத்தாலும் போதும்)

வெறும் கடாயில் இலைகளை எண்ணைய் விடாமல் வறுக்கவேண்டும்.பிறகு மிளகாய் வற்றல்,ஓமம்,பெருங்காயம் மூன்றையும் எண்ணைய் விட்டு வறுக்கவேண்டும்.

இலைகள் தவிர மற்றவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கடைசியில் இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும்.

வெய்யிலுக்கு தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

9 comments:

sathishsangkavi.blogspot.com said...

Wav... Super....

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Sangkavi.

GEETHA ACHAL said...

புதியாதாக இருக்கின்றது...சூப்பராக இருக்கும் போல...இங்கு எனக்கு இந்த இலை எல்லாம் கிடைக்காது...என்னுடைய அம்மாவுக்கும், மாமியாருக்கும் செய்ய சொல்கிறேன்...நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

வேப்பிலைக்கட்டி என்றதும் நான் வேறஎதுவோன்னு நினைச்சேன்.. ரொம்ப அருமையா இருக்கு..

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Starjan.

Vijiskitchencreations said...

நன்றாக இருக்கு. எங்க அம்மா செய்து நான் சாப்பிட்டு இருக்கேன். எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Viji.

ShanthiniRajkumar said...

Very unique recipe ! will definitely try !

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...