Sunday, January 16, 2011

வெஜ் பரோட்டா

தேவையானவை: 
கோதுமைமாவு 2 கப்
உருளைக்கிழங்கு 2
முட்டைக்கோஸ் 1 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி 1 கப்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1 டீஸ்பூன்
மசாலாதூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

------

செய்முறை:

கோதுமைமாவில் தேவையான உப்பு,தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.
உருளைக்கிழங்கை microwave 'H' ல் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
முட்டைக்கோஸை microwave 'H' ல் 5 நிமிடம் வைத்து எடுத்து மசித்துக்கொள்ளவும்.
பட்டாணியை வேகவைத்து எடுத்து வைக்கவும்.

------

கடாயில் எண்ணைய் வைத்து கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து மசித்துவைத்த உருளைக்கிழங்கு,முட்டைக்கோஸ்,
வேகவைத்த பட்டாணி,தேவையான உப்பு சேர்த்து பிரட்டவும்.
அதனுடன் மஞ்சள்தூள்,காரப்பொடி,மசாலாத்தூள் சிறிது எண்ணைய் சேர்த்து பிரட்டவும்.
தண்ணீர் சேர்க்கவேண்டாம். எல்லாம் ஒன்று சேர்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

-----
பிசைந்த சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி அளவு இட்டு
அதன் நடுவில் செய்து வைத்திருந்த வெஜ் உருண்டை ஒன்றை வைத்து எல்லா ஓரங்களையும் மையப்பகுதி நோக்கி
மசாலா தெரியாதவாறு மூடவும்.மீண்டும் சப்பாதி போல் தேய்க்கவும்.

அடுப்பில் தவாவை வைத்து இட்டு வைத்த பரோட்டாவை போட்டு இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

13 comments:

Asiya Omar said...

நான் மைதாமாவில் இப்படி ஸ்டஃப் செய்து செய்வதுண்டு.அருமை.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன். நன்றி.

Priya Sreeram said...

good one !

Aruna Manikandan said...

looks gr8..
thx. for sharing :)

Priya dharshini said...

My fav parota...nalla eruku...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி asiya.

Kanchana Radhakrishnan said...

செய்துபாருங்கள் ராமலஷ்மி.

Kanchana Radhakrishnan said...

Thanks Priya Sreeram.

Kanchana Radhakrishnan said...

Thanks Aruna Manikandan

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Priya.

Jaleela Kamal said...

ரொம்ப அருமை காஞ்சனா

நானும் அடிக்க்கடி இப்படி ஸ்டஃப்டு பரோட்டா செய்வதுNdu
காரப்பொடி என்பது மிளகாய் தூள் தானே. மசாலாதூள் என்பது ( கலவை மசாலாவா)

Jaleela Kamal said...

கண்டிப்பா இந்த் முறையிலும் செய்து பார்க்கிறேன்

Kanchana Radhakrishnan said...

காரப்பொடி என்பது மிளகாய்தூள் தான்,மசாலா தூள் என்பது மசாலா கலவை. Garam masala powder என்று கடைகளில் கிடைக்கும்.
இம்முறையில் செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி Jaleela.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...