தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்பச்சைமிளகாய் 2
பொட்டுக்கடலை 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
அவரைக்காயின் நாரை அகற்றிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு microwave bowl ல் நறுக்கியதை போட்டு தேவையான உப்பும்,சிறிது தண்ணீரும் சேர்த்து "H" ல் ஐந்து நிமிடம்
வைத்தால் போதும் வெந்துவிடும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த
அவரைத்துண்டுகளை சேர்த்து வதக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,பச்சைமிளகாய்,பொட்டுக்கடலை மூன்றையும் தண்ணீர் விடாமல் பொடி பண்ணி இதனுடன்
சேர்த்து ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.
9 comments:
நாங்கள் வறுவல் என்பதை நீங்கள் பொரியல் என்கிறீர்கள்.நாங்களும் இதே முறையில் சமைத்துக்கொள்வோம் !
இதில் பொட்டுக் கடலை மட்டும் சேர்த்ததில்லை. சேர்த்திடலாம் இனி:)! நன்றி மேடம்.
வருகைக்கு நன்றி ஹேமா.
வருகைக்கு நன்றி ஹேமா.
பொட்டுக்கடலை சேர்ப்பதன் மூலம் தேங்காய் சேர்ப்பதை சற்று குறைத்துக் கொள்ளலாம்.
வருகைக்கு நன்றி ராமலஷ்மி
கவனத்தில் கொண்டேன். மிக்க நன்றி.
பொட்டுக்கடலை சேர்த்து பொரியல் ரொம்ப நல்லாயிருக்குங்க...
பொட்டுக்கடலை எல்லாம் சேர்த்து வித்தியாசமாகத்தான் இருக்கின்றது.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
Post a Comment