Friday, November 18, 2011

முடக்கத்தான் கீரை மசியல்

முடக்கத்தான் கீரை 

தேவையானவை:
முடக்கத்தான் கீரை 2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
சின்ன வெங்காயம் 5
கடலை  மாவு 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
--------
அரைக்க:
தேங்காய் துருவல் 1/4 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
------
செய்முறை:

முடக்கத்தான் கீரையை நன்கு அரிந்து அலசிக்கொள்ளவும்.
ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் முதலில் பயத்தம்பருப்பை அரை கப் தண்ணீருடன் சேர்த்து அதன் மேல் அரிந்த முடக்கத்தான் கீரையை தேவையான உப்புடன் சேர்க்கவும்.
மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்த கீரையை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல் அரைத்து கீரையுடன் சேர்க்கவும்.
கடலை மாவை சிறிது தண்ணீருடன் கரைத்து சேர்த்து சிறிது கொதிக்கவிடவும்.
கடைசியில் கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்தது.

2 comments:

ஹேமா said...

முடக்கத்தான் இங்கே கிடைக்காது.ஊரிலும் மலைநாட்டுப் பக்கங்களில்தான் இருக்கிறது.ரசம்தான் சமைப்பதாக ஞாபகம் !

Gopala said...

முடக்கத்தான் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...