Monday, November 28, 2011

ராகி (கேழ்வரகு) தோசை




தேவையானவை:
ராகி

ராகி மாவு2 கப்
அரிசி மாவு 1 கப்
தயிர் 3/4 கப்
பச்சை மிளகாய் 3
சீரகம் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
பெருங்காய்த்தூள் 1 தேக்கரண்டி
------
செய்முறை:

ராகி மாவு கடைகளில் கிடைக்கும்.இல்லாவிடில் ராகியை வாங்கி காயவைத்து மெஷினில் அரைத்துக்கொள்ளலாம்.
தயிரை நன்கு கடைந்து ராகி மாவு,அரிசிமாவு,தேவையான தண்ணீர்,உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.(ரவை தோசை மாவு பதம்)

கரைத்த மாவில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிப்போடவும்.
சீரகத்தை உள்ளங்கையில் தேய்த்து போடவும்.
பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிப் போடவும்.
தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

அடுப்பில் தோசைகல்லை வைத்து காய்ந்ததும் மாவை கரண்டியால் எடுத்து சுற்றி ஊற்றவும்.
எண்ணையை சுற்றி ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்.

ராகி தோசைக்கு தக்காளி சட்னி,பச்சைமிளகாய் சட்னி சிறந்த side dish.

அரிசி கோதுமையை விட ஊட்ட சத்து நிறைந்தது ராகி.
புரதம்,சுண்ணாம்பு,இரும்புச்சத்து.நார்ச்சத்து எல்லாம் நிறைந்தது.

17 comments:

ராமலக்ஷ்மி said...

சத்தான குறிப்பு. நன்றி.

Kanchana Radhakrishnan said...

Thanks ராமலக்ஷ்மி.

sriganeshh said...

can you give me some recipe to use old vadaams....especially fryums.
upma sort will be better

உமா மோகன் said...

nice.extra fittingsthan super..

ஹேமா said...

நீங்க போட்டிருக்கிற படத்தைப் பார்த்தா இங்க வெள்ளையாத் தீட்டி வச்சிருக்காங்க.பாலில ஊறவிட்டு இல்லாட்டி சூப் செய்து சாப்பிடுவோம்.தோசை மென்மையா இருக்காதுன்னு நினக்கிறேன் !

Reva said...

Dosai asathalaa irukku..:)))
Reva

துளசி கோபால் said...

ஆஹா...... இன்னிக்கு ராகி தோசை செஞ்சுறப்போறேன்.

சமையல் குறிப்புக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

// சக்தி said...
nice.extra fittingsthan super..//

Thanks சக்தி
.

சாகம்பரி said...

பகிர்விற்கு நன்றி. மிகவும் சத்தான கேழ்வரகை பயன்படுத்துவது நல்லது. இங்கே மதுரை பக்கம் ராகியுடன் அரிசிமாவிற்கு பதில் உளுந்து சேர்த்து அரைப்போம். மிகுந்த மணத்துடன் இருக்கும். முறுகலாகவும் வரும்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். உங்களின் சிறுவர் தளத்தை முடித்து விட்டு இந்த தளத்திற்கு வருகிறேன். என் மனைவிற்கு உதவ உங்கள் தளத்தை bookmark செய்துள்ளேன். வாழ்த்துக்கள். நன்றி...சகோதரி!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

Kanchana Radhakrishnan said...

ஹேமா said...
//நீங்க போட்டிருக்கிற படத்தைப் பார்த்தா இங்க வெள்ளையாத் தீட்டி வச்சிருக்காங்க.பாலில ஊறவிட்டு இல்லாட்டி சூப் செய்து சாப்பிடுவோம்.தோசை மென்மையா இருக்காதுன்னு நினக்கிறேன் !//

நீங்கள் சொன்னமாதிரி கடினமாக இருக்காது.மிருதுவாக இருக்கும்.வருகைக்கு நன்றி ஹேமா.

Kanchana Radhakrishnan said...

// revathi said...
Dosai asathalaa irukku..:)

Thanks Revathi.

Kanchana Radhakrishnan said...

// துளசி கோபால் said...
ஆஹா...... இன்னிக்கு ராகி தோசை செஞ்சுறப்போறேன்.

சமையல் குறிப்புக்கு நன்றி.//

செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி துளசி கோபால்..

Kanchana Radhakrishnan said...

//சாகம்பரி said...
பகிர்விற்கு நன்றி. மிகவும் சத்தான கேழ்வரகை பயன்படுத்துவது நல்லது. இங்கே மதுரை பக்கம் ராகியுடன் அரிசிமாவிற்கு பதில் உளுந்து சேர்த்து அரைப்போம். மிகுந்த மணத்துடன் இருக்கும். முறுகலாகவும் வரும்//


உளுந்து போட்டும் செய்யலாம்.இது instant தோசை.வருகைக்கு நன்றி சாகம்பரி..

Menaga Sathia said...

super healthy dosa!!

Kanchana Radhakrishnan said...

//
sriganeshh said...
can you give me some recipe to use old vadaams....especially fryums.
upma sort will be better

Fryums வைத்து ஏதேனும் செய்யமுடியுமா என்று முயன்று பதிவிடுகிறேன்.வருகைக்கு நன்றி
sriganeshh.

சிவன் said...

ராகி தோசைக்கு ராகியை மெஷினில் மாவாக அரைப்பதைவிட ஊறவைத்து கிரைன்டர் ல் ஆட்டினால் கூடுதல் மணமாக இருக்கும் அல்லவா?

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...