தேவையானவை:
கடலைப்பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2கப்
துருவிய வெல்லம் 1கப்
நெய் 1/2 கப்
அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணய் தேவையானது
-------
மைதாமாவு 1 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
செய்முறை:
மைதாமாவை சலித்து உப்பு,எண்ணைய்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.ஒரு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
கடலைபருப்பை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வேகவைக்கவேண்டும்.நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் தேங்காய் துருவல்,பொடித்த வெல்லம்,ஏலக்காய் தூள் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.(தண்ணீர் விடவேண்டாம்)
வாணலியில் நெய் சேர்த்து அரைத்தவிழுது,அரிசி மாவு சேர்த்து நன்கு கிளற கடலைப்பருப்பு பூரணம் ரெடி.
மைதாமாவை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்திக்கு இடுவதுபோல இட்டு பூரணத்தை உள்ளே வைத்து மூடி கையால் தட்டவும்.ஒவ்வொரு உருண்டையையும் இது மாதிரி செய்யவேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை போட்டு சிறிது நெய் விட்டு ஒவ்வொரு போளியாக போட்டு இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுக்கவேண்டும்.
14 comments:
செய்முறை விளக்கம் அருமை. நன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.
போளி நல்லாருக்கு. எங்கூட்லயும் எல்லோருக்கும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி.
போளியின் செய்முறைப் பகிர்வுக்கு மிகவும் நன்றி. செய்து நாளாயிற்று. ஆசையைத் தூண்டிவிட்டப் பதிவு.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
போளி சாப்பிட ஆசை ஆனால் செய்ய சோம்பல்.
உங்கள் செய்முறை செய்ய ஆசையை தூண்டுகிறது.
உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.
போளி செய்முறை அருமை. நானும் போகியன்று வருடந்தோறும் செய்வேன்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
//அமைதிச்சாரல் said...
போளி நல்லாருக்கு. எங்கூட்லயும் எல்லோருக்கும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி.//
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்.
// கீதா said...
போளியின் செய்முறைப் பகிர்வுக்கு மிகவும் நன்றி. செய்து நாளாயிற்று. ஆசையைத் தூண்டிவிட்டப் பதிவு. //
வருகைக்கு நன்றி Geetha.
//
கோமதி அரசு said...
போளி சாப்பிட ஆசை ஆனால் செய்ய சோம்பல்.
உங்கள் செய்முறை செய்ய ஆசையை தூண்டுகிறது.//
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
வருகைக்கு நன்றி கோவை2தில்லி.
போளி என்றாலே என் பெரியப்பா ஒருவரின் ஞாபகம்தான் வரும்.எங்களைக் கண்டதும் ஓமப்பொடியும் போளியும் வாங்கி வருவார்.ஞாபகப் படுத்திவிட்டீங்க.
செய்முறை என் தோழிக்குக் காட்டினேன்.செய்து தருகிறாவாம் !
Post a Comment