Sunday, February 12, 2012

பச்சைமிளகாய் சட்னி



தேவையானவை:

பச்சைமிளகாய் 10
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கறிவேப்பிலை சிறிதளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும்.
பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியிலிருந்து கோதை எடுத்துவிட்டு லேசாக வறுக்கவேண்டும்.
பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும்.


வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம்.

தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

6 comments:

ஹேமா said...

எங்களூர் ஸ்பெஷல்.இடியப்பத்திற்கு பால் சொதியும் வச்சுக்கொண்டு இதைத் தாளிக்கமல் சம்பலாய் சாப்பிட்டால்....!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
ஹேமா.

Asiya Omar said...

அருமையாக இருக்கு.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Asiya Omar.

ஸாதிகா said...

காராசாரமான சட்னிதான்.

Kanchana Radhakrishnan said...

ஆம். காரமான சட்னி தான்.தயிர் சாதத்திற்கு ஏற்ற side dish.வருகைக்கு நன்றி ஸாதிகா.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...