தேவையானவை:
பாசுமதி அரிசி1 கப்
பச்சை பட்டாணி1 கப்
வெங்காயம்1
தக்காளி2
பச்சைமிளகாய்2
-------
ஏலக்காய்2
கிராம்பு2
இஞ்சி பூண்டு விழுது1தேக்கரண்டி
மிளகாய் தூள்1மேசைக்கரண்டி
பிரியாணி மசாலா1 மேசைக்கரண்டி
தயிர்1/2கப்
புதினா,கொத்தமல்லித்தழை சிறிதளவு
முந்திரிபருப்பு5
உப்பு,எண்ணெய் தேவையானது
செய்முறை:
பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.(ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர்)
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவேண்டும்.
-------
குக்கரை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி ஏலக்காய்,கிராம்பு சேர்த்து வதக்கி வெங்காயம் சேர்க்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வெந்ததும் தக்காளி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின்னர்
பச்சை பட்டாணியையும் தேவையான உப்பும் சேர்க்கவேண்டும்.
மிளகாய் தூள்,பிரியாணி மசாலா இரண்டையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதனுடன் ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து,,தயிர்,புதினா கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவேண்டும்.
முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.
8 comments:
செய்முறை மிகவும் எளிமையாகத்தான் உள்ளது. இன்றைக்கே செய்துபார்த்துவிடுகிறேன். பகிர்வுக்கு நன்றி.
.வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.
பஞ்சாபி புலாவ் பிரமாதமா இருக்குங்க....செய்து பார்க்கிறேன்.
.வருகைக்கு நன்றி கோவை2தில்லி.
பஞ்சாபி புலவு எளிமையாக, ருசிகரமாக உள்ளது!!
எனக்காகவே தந்தமாதிரி இருக்கு இந்தக் குறிப்பு.நன்றி அன்ரி !
// மனோ சாமிநாதன் said...
பஞ்சாபி புலவு எளிமையாக, ருசிகரமாக உள்ளது!!//
வருகைக்கு நன்றி Mano.
//
ஹேமா said...
எனக்காகவே தந்தமாதிரி இருக்கு இந்தக் குறிப்பு.நன்றி அன்ரி !//
.வருகைக்கு நன்றி Hema.
Post a Comment