தேவையானவை:
முருங்கைக்கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல்1 கப்
பச்சைமிளகாய் 2
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம்1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1 தேக்கரண்டி
கடலைபருப்பு1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்2
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
செய்முறை:
நறுக்கிய முருங்கைக்கீரையை நன்றாக அலசி வெதுவெதுப்பான நீரில் ஐந்து நிமிடம் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயை வதக்கவும்.
முருங்கைக்கீரையை பிழிந்து இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும்.தேவையான உப்பையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
கீரை வெந்ததும் சீரகத்தை அப்படியே பச்சையாகவும் மிளகை பொடித்தும் சேர்க்கவும்.
இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
வேண்டுமென்றால் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.:
14 comments:
பறித்த உடனே செய்தால் பிரமாதமாயிருக்கும். நிறைய கால்சியம் இருக்கிறது.
எனக்கு பிடித்த உணவுகளில் இதுவும் ஒன்று துரதிஸ்டவசமாக புலம்பெயர் நாட்டில் முருங்கை இலை கிடைப்பது அபூர்வம்.
இதே முறையில்தான் நானும் சமைக்கிறேன்.எப்பாச்சும் முருங்கையிலை நம் கடைகளுக்கு வரும்.பழுத்தல் இலையும் மண்ணுமாய்.அதுவும் பொன்விலை !
// பழனி.கந்தசாமி said...
பறித்த உடனே செய்தால் பிரமாதமாயிருக்கும். நிறைய கால்சியம் இருக்கிறது.//
.வருகைக்கு நன்றி பழனி கந்தசாமி
// அம்பலத்தார் said...
எனக்கு பிடித்த உணவுகளில் இதுவும் ஒன்று துரதிஸ்டவசமாக புலம்பெயர் நாட்டில் முருங்கை இலை கிடைப்பது அபூர்வம்.//
வருகைக்கு நன்றி அம்பலத்தார்.
பகிர்வுக்கு ரொம்ப நன்றி சிஸ்.முருங்கைக்கீரையை ஒரே மாதிரி சமைத்து சாப்பிட்டு போர் அடித்து போய் இருப்பதற்கு புது ரெஸிப்பி.உடனே டிரை பண்ண வேண்டும்.
எனக்கும் முருங்கைக்கீரை மிகவும் பிடிக்கும். ஆனால் இங்கு தில்லியில் கிடைக்காது.
முருங்ககீரை பொரியல் எனக்கு ரொம்ப பிடிச்சது,
//ஹேமா said...
இதே முறையில்தான் நானும் சமைக்கிறேன்.எப்பாச்சும் முருங்கையிலை நம் கடைகளுக்கு வரும்.பழுத்தல் இலையும் மண்ணுமாய்.அதுவும் பொன்விலை !//
.வருகைக்கு நன்றி ஹேமா.
// ஸாதிகா said...
பகிர்வுக்கு ரொம்ப நன்றி சிஸ்.முருங்கைக்கீரையை ஒரே மாதிரி சமைத்து சாப்பிட்டு போர் அடித்து போய் இருப்பதற்கு புது ரெஸிப்பி.உடனே டிரை பண்ண வேண்டும்.//
Thanks ஸாதிகா.
// கோவை2தில்லி said...
எனக்கும் முருங்கைக்கீரை மிகவும் பிடிக்கும். ஆனால் இங்கு தில்லியில் கிடைக்காது.//
வருகைக்கு நன்றி கோவை2தில்லி.
வருகைக்கு நன்றி Jaleela.
Blogger ஹேமா said...
//இதே முறையில்தான் நானும் சமைக்கிறேன்.எப்பாச்சும் முருங்கையிலை நம் கடைகளுக்கு வரும்.பழுத்தல் இலையும் மண்ணுமாய்.அதுவும் பொன்விலை !//
என்ன ஹேமா இந்த புலம்பல் புலம்பிட்டு இருக்கிறிங்க. இங்கு ஜேர்மனியிலும் உதே பல்லவிதான்
Post a Comment