தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு 2 துண்டுகள்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வெங்காயம்1
காய்ந்த மிளகாய்2
தேங்காய் துருவல்1/4 கப்
கடுகு1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணய் தேவையானது
-------
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கின் மேல் தோல் நடு வேர் இரண்டையும் அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,பச்சைமிளகாய்,வெங்காயம் மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்த மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை தேவையான உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும் வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வடிகட்டிய மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.
15 comments:
ம்...மிகப்பிடித்த உணவில் ஒன்று.இங்கு கிடைக்கிறது மரவள்ளிக்கிழங்கு.ஆனால் ஊரில் இருக்கிறதுபோல இல்லை !
எனக்கு பிடித்த கிழங்கு வகை.இதில் பொரியலா?ம்ம் யம்ம்ம்மி
எனக்கு மிகவும் பிடித்தது. அம்மா செய்வது...நெடுநாட்களாச்சு சாப்பிட்டு.
வெங்காயம் சேர்த்து செய்தது இல்லை.
செய்துப்பார்க்கிறேன்.
நன்றி.
//ஹேமா said...
ம்...மிகப்பிடித்த உணவில் ஒன்று.இங்கு கிடைக்கிறது மரவள்ளிக்கிழங்கு.ஆனால் ஊரில் இருக்கிறதுபோல இல்லை !//
வருகைக்கு நன்றி Hema.
// ஸாதிகா said...
எனக்கு பிடித்த கிழங்கு வகை.இதில் பொரியலா?ம்ம் யம்ம்ம்மி//
Thanks ஸாதிகா.
நல்ல குறிப்பு. செய்து பார்க்கிறேன். நன்றி.
அம்மாவும் இப்படிதான் செய்வாங்க,ஆனா நாந்தான் இரும்பி சாப்பிடமாட்டேன்..நல்லாயிருக்கு!!
அருமை.நானும் செய்வதுண்டு.
// ராமலக்ஷ்மி said...
நல்ல குறிப்பு. செய்து பார்க்கிறேன். நன்றி.//
செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.
// S.Menaga said...
அம்மாவும் இப்படிதான் செய்வாங்க,ஆனா நாந்தான் இரும்பி சாப்பிடமாட்டேன்..நல்லாயிருக்கு!!//
:-)))
// ஸாதிகா said...
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.//
வலைச்சரத்தில் சமையல் பகுதிகளைப் போட்டு அசத்தியிருக்கீங்க சாதிகா.நன்றி.
வித்தியாசமானதாக இருக்கிறது இந்த பொரியல்!
// Asiya Omar said...
அருமை.நானும் செய்வதுண்டு.//
வருகைக்கு நன்றி Asiya Omar.
// Mano Saminathan said...
வித்தியாசமானதாக இருக்கிறது இந்த பொரியல்!//
வாங்க மனோ ரொம்ப நாளாச்சு.
Post a Comment