Friday, March 30, 2012

வடு மாங்காய்



தேவையானவை:
மாவடு 1 கிலோ
உப்பு 1 கப்
மிளகாய் பொடி 1 கப்
கடுகு 1/4 கப்
மஞ்சள் துண்டு 3
விளக்கெண்ணைய் 1/4 கப்
தண்ணீர் 1 கப்
-----
செய்முறை:



மாவடு வாங்கும்பொழுது காம்புகள் உள்ள மாவடுவாக பார்த்து வாங்கவேண்டும்.
மாவடுவை நன்றாக அலசி தண்ணீரை வடிய வைத்து ஒரு டவலால் தண்ணீர் போக துடைக்கவேண்டும்.
ஒரு கப் தண்ணீரில் ஒரு கப் உப்பு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவேண்டும்.
கடுகையும் மஞ்சள் துண்டையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாவடுவை போட்டு விளக்கெண்ணையை பரவலாக தடவவேண்டும்..அதனுடன் கடுகு மஞ்சள் விழுதை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
ஊறுகாய் போடும் ஜாடியை நன்றாக துடைத்து முதலில் சிறிது உப்பு தண்ணீர் அடியில் ஊற்றவும்.
அதன் மேல் கொஞ்சம் கலந்த மாவடுவை சிறிது போட்டு அதன் மேல் சிறிது உப்பு தண்ணீரும் மிளகாய் பொடியும் போடவும்.
இதே மாதிரி மாவடுவும்,உப்பும்,மிளகாய் பொடியுமாக கடைசிவரை போட வேண்டும்.
இரண்டு நாள் கழித்து ஜாடியை ஒரு குலுக்கு குலுக்கி நன்கு மூடி வைக்கவேண்டும்.

(மீள் பதிவு )






















8 comments:

ஸாதிகா said...

பார்க்கவே நாவூறுது.இதோ வடுமாங்காய் சீஸன் வரப்போகிறதே:)

Radha rani said...

வடு மாங்காய் ரெசிப்பி கொடுக்கவேண்டும் என்று ஊறவைத்து முன்று நாளாகி விட்டது.நீங்க கொடுத்திட்டீங்க காஞ்சனா...உங்களோட செய்முறையும் நன்றாக உள்ளது.நாளை என் குறிப்பை பார்த்து சொல்லுங்கள்.கொஞ்சம் மாறுதலாக இருக்கும்..:)

ADHI VENKAT said...

வடு மாங்காய் சாப்பிட்டு பலவருடம் ஆகி விட்டது. பார்க்கும் போதே என்ன நினைக்கும் போதே நாவூருது....

ஊருக்கு போனால் சாப்பிட வேண்டியவற்றில் மாவடுவுக்கும் இடமுண்டு.

ராமலக்ஷ்மி said...

கோடை வெயிலுக்கு,
தயிர்சாதம்+வடுமாங்காய்=தேவாமிர்தம்.

நன்றி.

Kanchana Radhakrishnan said...

// ஸாதிகா said...
பார்க்கவே நாவூறுது.இதோ வடுமாங்காய் சீஸன் வரப்போகிறதே:)//


சீஸன் வந்துவிட்டது.வருகைக்கு நன்றி ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

//ராதா ராணி said...
வடு மாங்காய் ரெசிப்பி கொடுக்கவேண்டும் என்று ஊறவைத்து முன்று நாளாகி விட்டது.நீங்க கொடுத்திட்டீங்க காஞ்சனா...உங்களோட செய்முறையும் நன்றாக உள்ளது.நாளை என் குறிப்பை பார்த்து சொல்லுங்கள்.கொஞ்சம் மாறுதலாக இருக்கும்..:)//


உங்களது குறிப்பை பார்க்கிறேன் ராதா ராணி.

Kanchana Radhakrishnan said...

//h 30, 2012 1:24 AM
கோவை2தில்லி said...
வடு மாங்காய் சாப்பிட்டு பலவருடம் ஆகி விட்டது. பார்க்கும் போதே என்ன நினைக்கும் போதே நாவூருது....

ஊருக்கு போனால் சாப்பிட வேண்டியவற்றில் மாவடுவுக்கும் இடமுண்டு.//


வருகைக்கு நன்றி கோவை2தில்லி.

Kanchana Radhakrishnan said...

// ராமலக்ஷ்மி said...
கோடை வெயிலுக்கு,
தயிர்சாதம்+வடுமாங்காய்=தேவாமிர்தம்.//


ஆம்.தேவாமிர்தம்.தான்.வருகைக்கு நன்றி ராமலஷ்மி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...