மாங்காய் இஞ்சி
தேவையானவை:
மாங்காய் இஞ்சி 1 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் 3
எலுமிச்சம்பழம் 1
கடுகு 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணய் தேவையானது
செய்முறை:
மாங்காய் இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாங்காய் இஞ்சி துண்டுகள்,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
எலுமிச்சம்பழத்தை அதில் பிழிந்து நன்றாக கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு பொரித்து அதில் மங்காய் இஞ்சிக் கலவையை சேர்த்து கிளறவும்.
முப்பது நிமிடங்கள் கழித்து பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.
தயிர் சாதத்திற்கு ஏற்றது.
8 comments:
எனக்குப் பிடிக்கும் இந்த ஊறுகாய்.வாங்கி வைத்திருக்கிறேன் !
ரொம்ப சுலபமாக செய்து காட்டி இருக்கீங்க.
// ஹேமா said...
எனக்குப் பிடிக்கும் இந்த ஊறுகாய்.வாங்கி வைத்திருக்கிறேன் !//
.வருகைக்கு நன்றி ஹேமா
//ஸாதிகா said...
ரொம்ப சுலபமாக செய்து காட்டி இருக்கீங்க.//
ஆம்.செய்வதும் மிகவும் எளிது.வருகைக்கு நன்றி ஸாதிகா.
சென்ற வருடம் நண்பர் ஒருவர் சென்னையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து தந்தார். இதே மாதிரி தான் செய்து வைத்திருந்தேன். பிரமாதமாக இருந்தது.
வரிசையா ஊறுகாய்களைத் தந்து நாவூற செய்றீங்க.....
// கோவை2தில்லி said
வரிசையா ஊறுகாய்களைத் தந்து நாவூற செய்றீங்க..//
:-)))
மா இஞ்சி கடையில கிடைக்குதான்னு கேட்டுப்பாக்கணும்.கிடைத்தால் செய்து பார்க்கிறேன்..
.செய்வதும் எளிது. .வருகைக்கு நன்றி
ராதா ராணி.
Post a Comment