தேவையானவை:
பச்சரிசி 1 கப்
தண்ணீர் 5 கப்
பால் 1/2 கப்
மோர் 2 கப்
பச்சைமிளகாய் 3
சின்ன வெங்காயம் 8
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கடுகு 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசியை நன்றாகக் களைந்து 5 கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து ஸ்லிம்மில் வேகவைக்கவேண்டும்.( 20 நிமிடம் ஆகும்)
அதில் அரை கப் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவேண்டும்.
பின்னர் மத்தில் நன்றாக கடைய வேண்டும்.(மிக்சியில் போடக்கூடாது)
சின்ன வெங்காயத்தையும்,பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
தேவையான உப்புடன் பொடியாக நறுக்கிய இஞ்சி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
இரண்டு கப் மோரில் கடுகு தாளித்து இதில் ஊற்ற மோர் சாதம் ரெடி.
வெய்யிலுக்கு அருந்தினால் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.
18 comments:
ஆஹா! அடிக்கிற சித்திரை வெயிலுக்கு இந்த மோர் சாதம் தேவாமிர்தமா இனிக்குமே..:p
அடிக்கும் வெய்யிலுக்கு சூப்பரா இருக்குமே.....
கோடைக்கேற்ற ஜில் சாதம்.
//ராதா ராணி said...
ஆஹா! அடிக்கிற சித்திரை வெயிலுக்கு இந்த மோர் சாதம் தேவாமிர்தமா இனிக்குமே..://
ஆமாம்.வருகைக்கு நன்றி ராதா ராணி.
நல்ல குறிப்பு. நன்றி.
// கோவை2தில்லி said...
அடிக்கும் வெய்யிலுக்கு சூப்பரா இருக்குமே.....//
வெய்யிலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
வருகைக்கு நன்றி கோவை2தில்லி.
//ஸாதிகா said...
கோடைக்கேற்ற ஜில் சாதம்.//
நன்றி //ஸாதிகா.
பால் ஊற்ற வேண்டிய அவசியம் என்ன? பால் இல்லாமல் செய்யலாம் இல்லையா? பாலை சோற்றில் கலந்தால் பிடிக்காது. அத்னால் இந்த கேள்வி...
// ராமலக்ஷ்மி said...
நல்ல குறிப்பு. நன்றி.//
நன்றி ராமலக்ஷ்மி.
//நம்பள்கி said...
பால் ஊற்ற வேண்டிய அவசியம் என்ன? பால் இல்லாமல் செய்யலாம் இல்லையா? பாலை சோற்றில் கலந்தால் பிடிக்காது. அத்னால் இந்த கேள்வி...//
பால் சேர்ப்பதால் பால் வாசனை வராது.மேலும் மோர் சாதத்தில் புளிப்பு இருக்காது.வருகைக்கு நன்றி நம்பள்கி.
வெய்யிலுக்கு அருந்தினால் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.//
படிக்கும் போதே குளிர்ச்சியாக இருக்கிறது செய்து சாப்பிட்டால் ஆஹா ஆனந்தம்!
நன்றி..
மோர்ச்சாதம் வைக்கும்போது அந்த வாசனையே தனி.பிடிக்கும் !
எத்தனை வித விதமான உணவு வகை இருந்தாலும் மோர் சாதத்திற்கு இணை உலகில் ஏதுமில்லை. சின்ன வெங்காயத்தின் துணையுடன் மோர் சாதம் அதன் ருசியே தனி. மிக நல்ல பதிவு.
// கோமதி அரசு said...
வெய்யிலுக்கு அருந்தினால் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.//
படிக்கும் போதே குளிர்ச்சியாக இருக்கிறது செய்து சாப்பிட்டால் ஆஹா ஆனந்தம்!
நன்றி..//
ஆமாம்.வருகைக்கு நன்றி கோமதி அரசு
// ஹேமா said...
மோர்ச்சாதம் வைக்கும்போது அந்த வாசனையே தனி.பிடிக்கும் !//
வருகைக்கு நன்றி ஹேமா.
// புவனேஸ்வரி ராமநாதன் said...
எத்தனை வித விதமான உணவு வகை இருந்தாலும் மோர் சாதத்திற்கு இணை உலகில் ஏதுமில்லை. சின்ன வெங்காயத்தின் துணையுடன் மோர் சாதம் அதன் ருசியே தனி..//
நீங்கள் சொல்வது உண்மைதான்.மோர் சாதத்திற்கு இணை எதுவுமில்லை.வருகைக்கு நன்றி புவனேஸ்வரி.
ஜில்லுன்னு இருக்கு..
வருகைக்கு நன்றி
அமைதிச்சாரல்
Post a Comment