தேவையானவை:
அகத்திக்கீரை
அகத்திக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
சோள மாவு 1 மேசைக்கரண்டி
தக்காளி 2
பால் 1/4 கப்
வெண்ணெய் 1மேசைக்கரண்டி
மிளகுத் தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:
அகத்திக்கீரையை பொடியாக நறுக்கி நன்றாக அலசி microwave "H" ல் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
ஆறினவுடன் மிக்சியில் விழுது போல அரைக்கவேண்டும்.
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி அரை கப் தண்ணீருடன் மிக்சியில் அடித்து வைக்கவேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை உருக்கி சோளமாவை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
இத்துடன் தக்காளி சாறு,கீரை விழுது சிறிது தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் அடுப்பை 'slim' ல் வைத்து பால் சேர்த்து மிளகு தூள் தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.
அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்விக்கும்.
13 comments:
அகத்திக்கீரை எனக்குப் பிடித்தமானது. அருமையான குறிப்பு. நன்றி.
நன்றி. ராமலக்ஷ்மி.
எனக்கு பிடித்த அகத்திக்கீரை. சாப்பிட்டு தான் பல வருடங்களாகி விட்டது.....:)
சத்துள்ள குறிப்பு.
அகத்திக்கீரை மார்கழி மாதம் ஏகாதசிக்கு மட்டும் கிடைக்கும்.
கிடைத்தால் சூப் வைக்க வேண்டும்.
நன்றி.
// கோவை2தில்லி said...
எனக்கு பிடித்த அகத்திக்கீரை. சாப்பிட்டு தான் பல வருடங்களாகி விட்டது.....:)
சத்துள்ள குறிப்பு.//
வருகைக்கு நன்றி கோவை2தில்லி.
// கோமதி அரசு said...
அகத்திக்கீரை மார்கழி மாதம் ஏகாதசிக்கு மட்டும் கிடைக்கும்.
கிடைத்தால் சூப் வைக்க வேண்டும்.
நன்றி.//
நன்றி.கோமதி அரசு.
அகத்திக்கீரை சூப் அசத்தல்.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
அகத்திக்கீரை கசக்குமே.சூப் வைக்கலாமோ !
// ஹேமா said...
அகத்திக்கீரை கசக்குமே.சூப் வைக்கலாமோ !//
கசப்பு உடலுக்கு நல்லது ஹேமா.வருகைக்கு நன்றி.
உங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சமயமிருப்பின் பார்த்து கருத்துக் கூறவும். ந்ன்றி.
http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.html
அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்விக்கும்.
சத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : என் வீட்டுத் தோட்டத்தில்
Post a Comment