தேவையானவை:
குடமிளகாய் 2
பயத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது
செய்முறை:
குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
ஊறவைத்த பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவும்.
குடமிளகாய் நன்கு வதங்கிய பின் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை தூவி இறக்கவும்.
16 comments:
சத்தான குறிப்பு. நன்றி.
படம் பார்க்க சாப்பிடும் ஆவலை தூண்டுது..நல்ல ஆரோக்கியமான குறிப்பு.
பயத்தம் பருப்பு சேர்த்து புதுமையான குறிப்பு. பகிர்வுக்கு நன்றி.
வித்தியாசமான கோசுமல்லி.
// ராமலக்ஷ்மி said...
சத்தான குறிப்பு. நன்றி.//
நன்றி. ராமலக்ஷ்மி.
// ராதா ராணி said...
படம் பார்க்க சாப்பிடும் ஆவலை தூண்டுது..நல்ல ஆரோக்கியமான குறிப்பு.//
பயத்தம்பருப்பு உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.வருகைக்கு நன்றி
ராதா ராணி.
// புவனேஸ்வரி ராமநாதன் said...
பயத்தம் பருப்பு சேர்த்து புதுமையான குறிப்பு. பகிர்வுக்கு நன்றி.//
வருகைக்கு நன்றி புவனேஸ்வரி.
நல்லதொரு ரெசிபி. சத்துள்ளது.
நல்ல சத்துள்ள குறிப்பு. இது வரை குடமிளகாயில் இப்படி செய்தது இல்லை செய்து பார்க்கிறேன்.
நன்றி.
குடைமிளகாயில் ஒரு நல்ல குறிப்பு.
புதுசா இருக்கே !
//ஸாதிகா said...
வித்தியாசமான கோசுமல்லி.//
நன்றி. ஸாதிகா.
// கோவை2தில்லி said...
நல்லதொரு ரெசிபி. சத்துள்ளது.//
வருகைக்கு நன்றி கோவை2தில்லி.
// கோமதி அரசு said...
நல்ல சத்துள்ள குறிப்பு. இது வரை குடமிளகாயில் இப்படி செய்தது இல்லை செய்து பார்க்கிறேன்.
நன்றி.//
செய்து பாருங்கள்.ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.
// Asiya Omar said...
குடைமிளகாயில் ஒரு நல்ல குறிப்பு.//
Thanks Asia.
// ஹேமா said...
புதுசா இருக்கே !//
புதுசு தான்.வருகைக்கு நன்றி ஹேமா.
Post a Comment