தேவையானவை:
பனீர் துண்டுகள் 1 கப்
தயிர் 1/4 கப்
துருவிய இஞ்சி 1 மேசைக்கரண்டி
தனியா தூள் 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
--------
கிரேவிக்கு தேவையானது:
தக்காளி 3
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள் 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
தயிர் 3 மேசைக்கரண்டி
சர்க்கரை 1/2 தேக்கரண்டி
---------
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பனீர் துண்டுகள்,தயிர்,துருவிய இஞ்சி,தனியா தூள்,மிளகாய் தூள் சிறிது உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
கடாயில் சிறிது எண்ணெய் வைத்து ஊறவைத்த பனீர் மசலா துண்டுகளை வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
------
தக்காளியையும் பச்சைமிளகாயையும் மிக்சியில் நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெய் வைத்து அரைத்த விழுதினை சேர்த்து கிளறவேண்டும்.
அதனுடன் மஞ்சள்தூள்,தனியா தூள்,கரம் மசாலா,பெருங்காயத்தூள்,சீரகம் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தயிரையும் சர்க்கரையும் சேர்த்து இறக்கவேண்டும்.
இறக்கியபின் வறுத்த பனீர் துண்டுகளை சேர்க்கவேண்டும்.
15 comments:
படம் அருமை.சூப்பர்.
சப்பாத்தி,பூரிக்கு ரொம்ப நல்லாயிக்கும் இந்த பனீர் டிக்கா மசாலா.செய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது..நியாபகபடுத்திட்டிங்க.செய்யும் ஆவலை தூண்டுது படம்.
ஆகா பார்க்கவே சூப்பராக இருக்கு சாப்பிட்டால் ம்ம்ம்ம்
அருமையாக செய்து அழகாக பறிமாறி இருக்கின்றீர்கள்
ஆஹா! சூப்பர் ரெசிபி..... செய்துட வேண்டியது தான்.
படம் பார்க்க நல்லாயிருக்கு.ஆனால் எனக்கென்னமோ இந்தப் பனீர் பிடிக்கறதில்ல !
// Asiya Omar said...
படம் அருமை.சூப்பர்.//
.வருகைக்கு நன்றி Asiya.
// ராதா ராணி said...
சப்பாத்தி,பூரிக்கு ரொம்ப நல்லாயிக்கும் இந்த பனீர் டிக்கா மசாலா.செய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது..நியாபகபடுத்திட்டிங்க.செய்யும் ஆவலை தூண்டுது படம்.//
ஆம் சப்பாத்தி பூரிக்கு ஏற்றது.வருகைக்கு நன்றி ராதா ராணி.
பனீர் தான் எங்கள் ஊரில் சரியாக கிடைக்க மாட்டேன் என்கிறது, நாமே செய்யலாம் என்றால் சோம்பல், பனீர் கிடைக்கும் போது செய்து பார்த்து விடுகிறேன்.
//02 AM
Jaleela Kamal said...
ஆகா பார்க்கவே சூப்பராக இருக்கு சாப்பிட்டால் ம்ம்ம்ம்//
ஆம் சாப்பிட்டால் ம்ம்ம்ம்.
.வருகைக்கு நன்றி Jaleela.
// ஸாதிகா said...
அருமையாக செய்து அழகாக பறிமாறி இருக்கின்றீர்கள்.//
Thanks for the comment.
// கோவை2தில்லி said...
ஆஹா! சூப்பர் ரெசிபி..... செய்துட வேண்டியது தான்.//
செய்துபாருங்கள்.
// ஹேமா said...
படம் பார்க்க நல்லாயிருக்கு.ஆனால் எனக்கென்னமோ இந்தப் பனீர் பிடிக்கறதில்ல !//
:-)))
// கோமதி அரசு said...
பனீர் தான் எங்கள் ஊரில் சரியாக கிடைக்க மாட்டேன் என்கிறது, நாமே செய்யலாம் என்றால் சோம்பல், பனீர் கிடைக்கும் போது செய்து பார்த்து விடுகிறேன்.//
.வருகைக்கு நன்றி கோமதி அரசு.
good
Post a Comment