Monday, July 9, 2012

வெங்காய பகோடா



தேவையானவை:
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
வெங்காயம் 2
மிளகாய் பொடி 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
கொத்தமல்லி,கறிவேப்பிலை சிறிதளவு
ஆப்ப சோடா 1 சிட்டிகை
உப்பு,எண்ணெய் தேவையானது
------------------
செய்முறை:

வெங்காயத்தை நீட்ட வாக்கில் மெல்லிய slice களாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு அரிசி மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை ஆப்ப சோடா,பெருங்காயத்தூள்,தேவையான உப்பு,காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும்  சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசையவேண்டும்.

அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்துவைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவதுபோல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும்.

மொறு மொறு வெங்காய பகோடா ரெடி.

16 comments:

Radha rani said...

நல்லா முறுகலா எண்ணெய் தெரியாம நல்லா பொரித்திருக்கீங்க .பக்கோடா நல்லா இருக்கு.

நம்பள்கி said...

Thanks! I appreciate this...

virunthu unna vaanga said...

looks so awesome... my most favorite....
VIRUNTHU UNNA VAANGA

Kanchana Radhakrishnan said...

// ராதா ராணி said...
நல்லா முறுகலா எண்ணெய் தெரியாம நல்லா பொரித்திருக்கீங்க .பக்கோடா நல்லா இருக்கு.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராதா ராணி

Kanchana Radhakrishnan said...

//
நம்பள்கி said...
Thanks! I appreciate this.//

Thanks நம்பள்கி.

Avargal Unmaigal said...

படமும் செய்முறையும் அருமை

VijiParthiban said...

கர கர மொறு மொறு வெங்காய பக்கோடா பார்க்கும் பொழுதே நாக்கில் நீர் ஊருகிறது ... அருமை...

ராமலக்ஷ்மி said...

மொறுமொறுப்பான பக்கடா சாப்பிடத் தூண்டுகிறது. குறிப்புக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

//Vijayalakshmi Dharmaraj said...
looks so awesome... my most favorite....//

Thanks Vijayalakshmi Dharmaraj

Kanchana Radhakrishnan said...

//Avargal Unmaigal said...
படமும் செய்முறையும் அருமை//


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
Avargal Unmaigal

Kanchana Radhakrishnan said...

// VijiParthiban said...
கர கர மொறு மொறு வெங்காய பக்கோடா பார்க்கும் பொழுதே நாக்கில் நீர் ஊருகிறது ... அருமை...//

Thanks VijiParthiban.

உமா மோகன் said...

கரம் கரம் பக்கோடா ரெடி வாங்க சாப்பிடலாம் காஞ்சனாவைப் பாராட்டிக்கிட்டே

Kanchana Radhakrishnan said...

// ராமலக்ஷ்மி said...
மொறுமொறுப்பான பக்கடா சாப்பிடத் தூண்டுகிறது. குறிப்புக்கு நன்றி.//

Thanks ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

// சக்தி said...
கரம் கரம் பக்கோடா ரெடி வாங்க சாப்பிடலாம் காஞ்சனாவைப் பாராட்டிக்கிட்டே//


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சக்தி

இராஜராஜேஸ்வரி said...

மொறு மொறு வெங்காய பகோடா

அருமையான சுவையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
இராஜராஜேஸ்வரி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...