தேவையானவை:
பழுத்த தக்காளி 6
கேரட் 2
முட்டைகோஸ் 1/2 கப் துருவியது
பெரிய வெங்காயம் 1
பூண்டு 2 பல்
கார்ன் மாவு 1/4 கப்
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
துருவிய சீஸ் 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
தாளிக்க:
பிரிஞ்சி இலை 1
கிராம்பு 2
------
செய்முறை:
தக்காளி,வெங்காயம்,கேரட்,பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிரிஞ்சி இலை,கிராம்பு தாளித்து அதனுடன் நறுக்கிய தக்காளி,கேரட்,முட்டைகோஸ்,வெங்காயம்,பூண்டு
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.கார்ன் மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதனுடன் கலந்து கொதிக்கவைடவும்.
மேலும் இரண்டு கப் தண்ணீருடன் தேவையான உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு ஆறவிடவும்.
ஆறியதும் மிக்சியில் அரைத்து வடிகட்டினால்...சுவையான தக்காளி சூ[ப் ரெடி.
பரிமாறும் சமயம் அதன் மேலாக மிளகு தூள், வெண்ணெய்,,துருவிய சீஸ்,கொத்தமல்லித்தழை தூவி கொடுக்கலாம்.
9 comments:
அனைவருக்கும் பிடித்தமான சூப். குறிப்புக்கு நன்றி.
soup superb...
VIRUNTHU UNNA VAANGA
நெய்யில் வறுத்த ரொட்டித்துண்டுகள் சூப்புடன் பரிமாறலாம்..
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
//
ராமலக்ஷ்மி said...
அனைவருக்கும் பிடித்தமான சூப். குறிப்புக்கு நன்றி.//
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
// Vijayalakshmi Dharmaraj said...
soup superb...
VIRUNTHU UNNA VAANGA//
Thanks Vijayalakshmi Dharmaraj
சூப் பார்க்க கலர்புல்லா நல்லா இருக்கு..
//இராஜராஜேஸ்வரி said...
நெய்யில் வறுத்த ரொட்டித்துண்டுகள் சூப்புடன் பரிமாறலாம்..
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//
ஆம். நெய்யில் வறுத்த ரொட்டித்துண்டுகள் சூப்புடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.
//ராதா ராணி said...
சூப் பார்க்க கலர்புல்லா நல்லா இருக்கு..//
Thanks ராதா ராணி.
வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...
செய்து பார்ப்போம்...
பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)
Post a Comment