வாழைத்தண்டு 1
கெட்டி மோர் 1 கப்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
----
அரைக்க:
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர் உப்பு,பெருங்காயம்
சேர்த்து வேகவைக்கவும்.முக்கால் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவைக்கவும்
கடைசியில் ஒரு கப் மோர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தண்ணியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.
தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
7 comments:
Healthy and delicious recipe :)
வாழைத்தண்டு மோர்கூட்டு படிக்கும் போதே சுவையாய் உள்ளது.
நல்ல குறிப்பு. நன்றி.
அருமை...
சமையல் குறிப்பிற்கு நன்றி...
tm2
Thanks Aruna.
நன்றி ராமலக்ஷ்மி.
மிகவும் நன்றாக இருக்கு, இதுமாதிரி இன்னும் நிறைய வேணும்.
Post a Comment