Tuesday, December 18, 2012

பூசணி கூட்டு



தேவையானவை:
பூசணி துண்டுகள் 2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து கடலைப்பருப்பை நன்றாக வேகவைக்கவேண்டும்.
கடலைப்பருப்பு நன்றாக வெந்ததும் பூசணித்துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
பூசணிக்கூட்டை சாதத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்.சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.

14 comments:

Yaathoramani.blogspot.com said...

எனக்கு மிகவும் பிடித்த கூட்டு
கிடைத்தால் விரும்பிச் சாப்பிடுவேன்
தங்கள் பதிவின் மூலம் இனிமேல்
நானே செய்து கொள்ளும் தெம்பு வந்து விட்டது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Ramani

கோமதி அரசு said...

எங்கள் வீட்டில் புளிக்குழம்பு, வத்தகுழம்பு வைத்தால் பூசணி சீஸன் என்றால் இந்த கூட்டுதான்.
வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.
படங்கள் செய்முறை விளக்கம் எல்லாம் ந்ன்றாக இருக்கிறது.

virunthu unna vaanga said...

my favorite too..
Kollu Poondu/Horse gram Garlic Rice
VIRUNTHU UNNA VAANGA

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் பாராட்டுக்கும்நன்றி
கோமதி அரசு.

M. Shanmugam said...

நல்ல ஒரு சமையல் குறிப்பு.
மிக்க நன்றி.

Tamil News Service

Kanchana Radhakrishnan said...

Thanks Vijayalakshmi Dharmaraj

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி M.Shanmugam.

Priya ram said...

கூட்டு பார்க்கவே சாப்பிட அழைக்கிறது.... இதே மாதிரி தான் எங்க வீட்டிலும் செய்வோம்.... சூப்பர்..

ஸாதிகா said...

நல்லதொரு குறிப்பு.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் பாராட்டுக்கும்நன்றி Priya Ram

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஸாதிகா.

ராமலக்ஷ்மி said...

எனக்கும் மிகப் பிடித்தமான கூட்டு. துளி வெல்லம் சேர்ப்பார்கள் அம்மா நாங்கள் சிறியவர்களாய் இருக்கையில்:)!

Kanchana Radhakrishnan said...

:-)
நன்றி ராமலக்ஷ்மி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...