Thursday, April 11, 2013

வெள்ளரிப் பச்சடி



தேவையானவை:
வெள்ளரிக்காய் 2
தயிர் 1 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
------
செய்முறை:


வெள்ளரிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை சிறிது தயிர் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய்,அரைத்த விழுது,தயிர் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
கடாயில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்மிளகாய் வற்றல் ,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
வெள்ளரிப் பச்சடி வெயிலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வெயில் காலத்திற்கு நல்லது...

குறிப்பிற்கு நன்றி...

Yaathoramani.blogspot.com said...

கோடைக்கேற்ற அருமையான ரெஸிபி
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

நன்றி Ramani Sir.

கீதமஞ்சரி said...

உடனே செய்துவிட்டேன். மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. நன்றி காஞ்சனா.

Kanchana Radhakrishnan said...

செய்வதும் எளிது. வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.

ராமலக்ஷ்மி said...

கோடைக்கு ஏற்ற நல்ல குறிப்பு. இன்றே செய்து விடுகிறேன்:). நன்றி.

VijiParthiban said...

வெயில் காலத்திற்கு நல்லது.

செய்து பார்கிறேன் அக்கா.

Kanchana Radhakrishnan said...

நன்றி ராமலக்ஷ்மி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...