தேவையானவை:
முள்ளங்கி 2
காரட் 2
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
நிலக்கடலை 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு சிறிய துண்டு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:
முள்ளங்கி,காரட் இரண்டையும் நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
------
முள்ளங்கி.காரட் இரண்டையும் சிறிது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
microwave லும் வைத்து வேகவைக்கலாம்.microwave oven ல் இரண்டையும் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து ' H 'ல் ஐந்து நிமிடம் வைத்தால் போதும்.வெந்துவிடும்.
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வேகவைத்த முள்ளங்கி,காரட் இரண்டையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு தூவி நன்கு கிளறி இறக்கவும்.
(இந்த பொடியை தண்ணீர் விடாமல் அரைப்பதால் இரண்டு,மூன்று நாள் வைத்துக்கொள்ளலாம்,எல்லாப் பொரியலுக்கும் உபயோகப்படுத்தலாம்.)
முள்ளங்கி,காரட் பொரியல் சற்றே மாறுபட்ட வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.
8 comments:
மாறுபட்ட வித்தியாசமான ருசியுடன்
"முள்ளங்கி...காரட் பொரியல்" பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
கேரட், முள்ளங்கி வித்தியாசமான காம்பினேஷனா இருக்கே
வித்தியாசமாக இருக்கு...
பாராட்டுகள்.
வித்தியாசத்தை செய்து பார்க்க வேண்டும்... நன்றி...
@ இராஜராஜேஸ்வரி
வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.
@ ராஜி.
Thanks ராஜி.
@ கோவை2தில்லி.
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி ஆதி.
@ திண்டுக்கல் தனபாலன்.
நன்றி.திண்டுக்கல் தனபாலன்.
Post a Comment