Thursday, July 11, 2013

கம்பு அடை



தேவையானவை:                                              கம்பு

கம்பு 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/4 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
மிளகாய் வற்றல் 2
பச்சைமிளகாய் 2
பெருங்காயம் ஒரு துண்டு
வெங்காயம் 1
புதினா ஒரு கொத்து
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:

கம்பை தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
மற்ற பருப்புகளை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

ஊறவைத்த கம்பு,பருப்புகளை வடிகட்டி அதனுடன் பெருங்காயம்,மிளகாய் வற்றல்,பச்சைமிளகாய்,பெருங்காயம்,தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.
அரைத்த மாவில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
புதினாவையும்,கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டியில் அடை மாவை ஊற்றி சற்று கெட்டியாக வார்க்கவேண்டும்.அடை ஒரே பதத்தில் வேகுவதற்காக நடுவில் ஒரு துளையிட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு சற்று நேரம் கழித்து எடுக்கவும்.

இந்த கம்பு அடையை  இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிடலாம்.
வேர்க்கடலை,பொட்டுக்கடலை,பச்சைமிளகாய் சேர்த்த சட்னியுடனும் சாப்பிடலாம்.

10 comments:

ராஜி said...

எங்க பாட்டி செஞ்சு குடுப்பாங்க அம்மாவும் செய்வாங்க. ஆனா, இப்போ கம்பை வாங்கி சுத்தம் பண்ணி அரைச்சு...,ன்னு நான் தான் செய்யுறதில்லை

ஸாதிகா said...

சத்துமிகு டிரடிஷனல் ஐட்டம்.

Kanchana Radhakrishnan said...

@ கவிதை வீதி... // சௌந்தர்

வருகைக்கு நன்றி கவிதை வீதி... // சௌந்தர்.

Kanchana Radhakrishnan said...

@ ராஜி.

சுத்தம் செய்த கம்பு சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்.வருகைக்கு நன்றி ராஜி.

Unknown said...

This item is good for health . Thank you for giving good tips

ADHI VENKAT said...

சத்துள்ள குறிப்பு.

கடைகளில் கிடைக்கும் கம்பு மாவுடன், ஊறவைத்து அரைத்த பருப்புகளை கலந்து செய்தால் நன்றாக இருக்குமா?

Kanchana Radhakrishnan said...

@ ஸாதிகா.

வருகைக்கு நன்றி ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

@ Viya Pathy

Thank you for the comment.

Kanchana Radhakrishnan said...

@ ராமலக்ஷ்மி

.வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

//கோவை2தில்லி said...
சத்துள்ள குறிப்பு.

கடைகளில் கிடைக்கும் கம்பு மாவுடன், ஊறவைத்து அரைத்த பருப்புகளை கலந்து செய்தால் நன்றாக இருக்குமா?//


கம்பு (pearl millet) மாவில் கஞ்சி செய்தால் நன்றாக இருக்கும்.
கம்பு எல்லா departmental store லும் கிடைக்கும்.அதை ஊறவைத்து தோசை,அடை செய்யலாம்.
வருகைக்கு நன்றி Aadhi.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...