தேவையானவை:
வரகரிசி 1 கப்
தண்ணீர் 3 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
நெய் 1/4 கப்
முந்திரிபருப்பு 10
ஜாதிக்காய்1 துண்டு
குங்குமப்பூ 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
பால் 1 மேசைக்கரண்டி
--------
செய்முறை:
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு வரகரிசியை சிறிது நெய் சேர்த்து வறுக்கவும்.
வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.
ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 3 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வறுத்த வரகசரிசியைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசி நன்றாக வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும். (வரகரிசி வேகுவத்ற்கு பத்து நிமிடம் ஆகும்).
ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் ,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும். முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
6 comments:
படத்தைப் பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது... பாராட்டுக்கள்... நன்றி...
ஆரோக்கியமான ஒரு உணவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
@ திண்டுக்கல் தனபாலன்
Thanks திண்டுக்கல் தனபாலன்.
@ ராஜி
வருகைக்கு நன்றி ராஜி.
வணக்கம். தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_24.html
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது முதலில் வாழ்த்துக்கள்... சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_24.html?showComment=1390519247701#c4761600294553611110
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment