Monday, July 15, 2013

நெல்லிக்காய் (Gooseberry ) சாதம்



தேவையானவை:
நெல்லிக்காய் 5
உதிரியாக வடித்த சாதம் 1 கப்
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணய் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:


நெல்லிக்காயை வேகவைத்து (குக்கரில் சிறிது தண்ணீருடன் 2 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்) ஆறினவுடன் உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்று சுற்றவும்.(முடிந்தால் துருவிக்கொள்ளலாம்)
உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் உதிரியாக வடித்த சாதத்தை மஞ்சள் தூள்,நல்லெண்ணய் சேர்த்து பிசிறவும்.
ஐந்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
அதில் துருவிய நெல்லிக்காய்,உளுத்தம்பருப்பு பொடி தேவையான உப்பு சேர்த்து பிசிறவும்.
கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்க சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி.
நெல்லிக்காயில் வைட்டமின்' C ' அதிகம் உள்ளது.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவையான நெல்லிக்காய் சாதம் (இதுவரை செய்ததில்லை) செய்முறை குறிப்பிற்கு நன்றி...

Kanchana Radhakrishnan said...

செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ராமலக்ஷ்மி said...

சத்தும் சுவையும் நிறைந்த சாதம். நல்ல குறிப்பு.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி.

கோமதி அரசு said...

நான் பச்சையாக துருவி தாளித்து செய்வேன். வேகவைத்து உங்கள் பக்குவத்தில் செய்து பார்க்கிறேன்.
நன்றி.

கோமதி அரசு said...

நான் பச்சையாக துருவி தாளித்து செய்வேன். வேகவைத்து உங்கள் பக்குவத்தில் செய்து பார்க்கிறேன்.
நன்றி.

Kanchana Radhakrishnan said...

பச்சையாக துருவிச் செய்தாலும் சற்று உவர்ப்பு ருசியுடன் சுவையாக இருக்கும். வருகைக்கு நன்றி கோமதி அரசு.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...