Tuesday, March 25, 2014

முருங்கை...முந்திரி ...குருமா



தேவையானவை:

முருங்கைக்காய் 5
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
முந்திரிப் பருப்பு 10
கசகசா 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சைமிளகாய் 2
---
தாளிக்க:

தேங்காயெண்ணய் 1 மேசைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 5
கறிவேப்பிலை ஒருகொத்து
------

செய்முறை:


முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து உள்ளேயிருக்கும் கதுப்பை தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயம்,பூண்டு,பச்சைமிளககாய்,இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.

அரைக்கக்க்கொடுத்துள்ளவைகளில் முந்திரிபருப்பு,கசகசா இரண்டையும் தனித்தனியே அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தேங்காய்.பச்சைமிளகாயுடன் விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து பொடியாக நறுக்கியுள்ள வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய் நன்றாக வதக்கவேண்டும்.
அதனுடன் முருங்கைக்காய்   கதுப்பை மஞ்சள் தூளுடன் சேர்த்து சிறிது வதக்கி தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் அடுப்பை அணைத்து தேங்காயெண்ணையில் கடுகு,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை தாளித்து குருமாவுடன் சேர்க்கவேண்டும்.

முருங்கை..முந்திரி..குருமா பூரி,சப்பாத்திக்கு ஏற்ற sidedish.

4 comments:

ராஜி said...

முருங்கையில் சாம்பார், காரக்குழம்பு, பொரியல், சூப் மட்டும் செய்யலாம்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா குருமா புதுசா இருக்கே!

Kanchana Radhakrishnan said...

குருமா புதுசு தான்.ஆனால் நல்ல ருசியாக இருக்கிறது.வருகைக்கு நன்றி ராஜி.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ருசியாக இருக்கிறது என்றால் செய்து பார்த்திட வேண்டியது தான்...

முந்திரிப் பருப்பு 10 = பூண்டு 5 பல்

இதற்கு அது சரியாகி விடும்படியால் செய்து பார்க்கிறோம்...

Kanchana Radhakrishnan said...

Thanks திண்டுக்கல் தனபாலன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...