தேவையானவை:
பச்சரிசி மாவு 1 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
கடலை மாவு 1/4 கப்
எள் 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு அதனுடன் மிளகாய் தூள்,பெருங்காய்த்தூள்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
பின்னர் அதனுடன் கடலை மாவு,பொட்டுக்கடலை மாவு,எள் சேர்த்து கிளறவும்.கிளறிய மாவு முறுக்கு மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
வேண்டுமென்றால் தண்ணீர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.
வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் முறுக்கு வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
6 comments:
வீட்டில் செய்வார்கள்... அடுத்த நாள் பல் டாக்டரை சந்திக்க வேண்டும்.... ஹிஹி...
@ திண்டுக்கல் தனபாலன்
பொட்டுக்கடலைமாவு சேர்ப்பதால் பல் டாக்டருக்கு போக வேண்டிய அவசியம் ஏற்படாது..மிருதுவாகவே இருக்கும்.வேண்டுமென்றால் மாவு பிசையும்போது சிறிது வெண்ணெய் சேர்க்கலாம்.
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
சுவையான குறிப்பு. தண்ணீரில் கொதிக்க வைப்பது எதற்காக?
அப்படியே தான் மாவில் போட்டு பிழிந்திருக்கிறேன்...
வருகைக்கு நன்றி Yarlpavanan Kasirajalingam
@ Adhi
கொதிக்கும் தண்ணீரில் பிசைவதால் முறுக்கு மிருதுவாக இருக்கும். வருகைக்கு நன்றி Adhi.
அப்படியா!! இனி இப்படி செய்து பார்க்கிறேன். பதிலுக்கு மிக்க நன்றி.
Post a Comment