தேவையானவை:
ஓட்ஸ் 1 கப்
பயற்றம்பருப்பு 1/4 கப்
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு 10
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 மேசைக்கரண்டி
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையானது
----------------------------
செய்முறை:
பயற்றம்பருப்பை அரை கப் தண்ணீர் மஞ்சள தூள் சேர்த்து குக்கரில் நன்றாக குழைய வேகவைக்கவேண்டும்.
ஒரு microwave bowl ல் ஒரு கப் ஓட்ஸுடன் 1 1/2 கப் தண்ணீர் விட்டு "H" ல் ஐந்து நிமிடம் வைத்தால் ஓட்ஸ் நன்றாக வெந்துவிடும்
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த பயற்றம்பருப்பு,வெந்த ஓட்ஸ் தேவையான உப்பு மூன்றையும் சேர்த்து கிளறவேண்டும்.
அதனுடன் மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.
பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.
கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.
நார்சத்து மிகுந்த,சத்து நிறைந்த உணவு இது.
4 comments:
அருமையான குறிப்பு. நன்றி.
வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் நிச்சயம் செய்து பார்க்கிறேன்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
@ ராமலக்ஷ்மி
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
செய்துபாருங்கள் செய்வது எளிது.மிகவும் ருசியாகவும் இருக்கும். வருகைக்கு நன்றி ரூபன்.
Post a Comment