தேவையானவை:
பீர்க்கங்காய் 2
மிளகாய்வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் ஒரு துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:
பீர்க்கங்காயின் தோலை சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து நறுக்கிய துண்டுகளை வதக்கிக்கொள்ளவும்.
அதே வாணலியில் மிளகாய்வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிவக்க வறுக்கவேண்டும்.
மிக்சியில் முதலில் இந்த நான்கையும் தேவையான உப்புடன் அரைத்துவிட்டு அதனுடன் வதக்கிய பீர்க்கங்காய் துண்டுகளைப் சேர்த்து விப்பரில் ஒரு சுற்று சுற்ற வேண்டும்.
கடைசியில் தாளிக்கவும்.
பீர்க்கங்காய் இரத்தத்தை சுத்திகரித்து உடல் சூட்டை தணிக்கும்.
8 comments:
வணக்கம்
பீர்க்கங்காய் கறிதான் சாப்பிட்டேன் ஆனால் வித்தியாசமான துவையல் பற்றி இன்றுதான் அறிந்தேன் செய்து பார்க்கிறோம்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பீர்க்கங்காய் சட்னி தெரியும். அம்மா சமைத்துத் தருவார்கள்... துவையல் இன்றுதான் கேள்விப்படுகிறேன்...
இன்றே செய்து பார்க்கிறோம்...
நன்றி...
ரூபன்.
@ செய்துபாருங்கள் செய்வது எளிது. வருகைக்கு நன்றி ரூபன்.
@ கார்த்திக் சரவணன்
செய்துபாருங்கள் . வருகைக்கு நன்றி
கார்த்திக் சரவணன்,
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்
நல்ல குறிப்பு. தோலின் முள் பகுதி மட்டும் சீவிவிட்டு தோலை சேர்த்தே செய்வது வழக்கம். உ.ப சேர்த்து இந்த முறையில் செய்து பார்க்கிறேன். நன்றி.
தங்களுக்கு என் மகளிர் தின வாழ்த்துகள்!
Thanks
ராமலக்ஷ்மி
Post a Comment