Tuesday, April 7, 2015

மசாலா மோர்



தேவையானவை:

நெல்லிக்காய் 1
இஞ்சி 1 துண்டு
மாங்காய் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
புதினா   சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
தயிர் 1கப்
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையானது
--------

செய்முறை:


நெல்லிக்காயை microwave bowl ல் சிறிது தண்ணீர் வைத்து "H" ல் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் நன்கு வெந்திருக்கும். வேகவைத்த
நெல்லிக்காய்,இஞ்சி,மாங்காய்,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை'
புதினா  எ ல்லாவற்றையும் மிக்சியில் சிறிது தண்ணீர் தெளித்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்,
அரைத்த விழுதில் மீண்டும் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
வடிகட்டிய விழுதுடன் ஒரு கப் தயிர்,பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் விப்பரில் அடிக்கவேண்டும்.

மசாலா மோர் வெயிலுக்கு ஏற்றது.தாகம் அடங்கும்.

7 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
செய்து பார்க்கிறோம்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
செய்து பார்க்கிறோம்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... நன்றி அம்மா...

Kanchana Radhakrishnan said...

@ ரூபன்

நன்றி. ரூபன்.

ADHI VENKAT said...

நிச்சயம் சுவையாக இருக்கும். செய்து பார்க்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

@ Adhi Venkat


Thanks Adhi.

ராமலக்ஷ்மி said...

கோடைக்கு ஏற்ற குறிப்பு. நன்றி.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...