தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட் 1/2 கப்
சர்க்கரை 1 1/4 கப்
பால் 1/4 கப்
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா 1 சிட்டிகை
------
செய்முறை:
பாதாம் பருப்பையும் வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,சர்க்கரை,வெண்ணெய்,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அப்படியே அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.
15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.
பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.
4 comments:
ஐ! ஸ்வீட்.... செஞ்சு சாப்பிடுறேன்
Thanks Raji
ஆப்ப சோடா போடாமல் செய்கிறேன்.
கணவருக்கு ஆப்ப சோடா ஒத்துக் கொள்ளாது.
வருகைக்கு நன்றி கோமதி அர்சு
Post a Comment