Thursday, October 26, 2017

சுரைக்காய் கூட்டு


தேவையானவை:
சுரைக்காய் 1
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது
தேங்காய் எண்ணெய்   2 டேபிள்ஸ்பூன்

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

------
செய்முறை:


சுரைக்காயை தோலை சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில்  வாணலியை வைத்து   சுரைக்காயை  மஞ்சள் தூள் சேர்த்து .தேங்காயெண்ணையில் வதக்கவேண்டும்.தண்ணீர் விடவேண்டாம்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.சுரைக்காய் வெந்தவுடன் 

தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை  தேங்காயெண்ணயில் தாளித்து   அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

சுரைக்காய் கூட்டை சாதத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்.சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.

2 comments:

ராஜி said...

சுரைக்காய் அடிக்கடி சாப்பிட்டா உடலில் இருக்கும் கெட்ட நீர்லாம் வெளில வரும்

Kanchana Radhakrishnan said...

ஆமாஒ ராஜி நீங்கள் சொல்வது சரியானதே.
வருகைக்கு நன்றி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...