Wednesday, September 17, 2008

வடைகறி

தேவையானவை:

கடலைபருப்பு 1 கப்
துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி 3
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன்
தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்
மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.அதனுடன் மசாலாபொடி,உப்பு,இரண்டு கப் தண்ணீர் கலந்து வேகவைக்கவேண்டும்.
பின்னர் அரைத்து வேகவைத்த மாவை கலந்து மீண்டும் பத்து நிமிடம் வேகவைக்கவேண்டும்.
இறக்கிய பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.

வடைகறியை இட்லி தோசைக்கு side dish ஆக உபயோகித்தால் மேலும் அதிகமாக இரண்டு உள்ளே இறங்கும்.

9 comments:

கோவி.கண்ணன் said...

சென்னை ஹோட்டல்களில் காலைச் சிற்றுண்டியில் நான் விரும்பிச் சாப்பிட்டுவது வடைகறி தான்.

செய்முறை போட்டு இருக்கிங்க, இந்த ஞாயிற்றுக் கிழமை செஞ்சுப் பாத்துடுறேன்.

Kanchana Radhakrishnan said...

செஞ்சு பார்த்துட்டு..எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க..
வருகைக்கு நன்றி கோவி

Anonymous said...

எங்க வீட்டிலும் இதை செய்வார்கள்.. (சில மாற்றங்களுடன்) :)

manikandan said...

சீரங்கத்துல உள்ள பிள்ளையார் கடைல (மாமா கடை இரவு மட்டும் ) சாப்பிட்டு பாருங்க ! ரொம்ப பிரமாதமா இருக்கும். அத தவிர கும்பகோணத்துல ஒரு சில ஹோட்டல்ல கூட நல்லா இருக்கும். பேரு ஞாபகம் வரல.

Kanchana Radhakrishnan said...

//Thooya said...
எங்க வீட்டிலும் இதை செய்வார்கள்.. (சில மாற்றங்களுடன்) :)//

அதையும் தெரிவியுங்கள் தூயா

Kanchana Radhakrishnan said...

// அவனும் அவளும் said...
சீரங்கத்துல உள்ள பிள்ளையார் கடைல (மாமா கடை இரவு மட்டும் ) சாப்பிட்டு பாருங்க ! ரொம்ப பிரமாதமா இருக்கும். அத தவிர கும்பகோணத்துல ஒரு சில ஹோட்டல்ல கூட நல்லா இருக்கும். பேரு ஞாபகம் வரல.//

ஓஹோ...நீங்க கிட்டத்தட்ட நம்ப ஊர் பக்கம் தான்...மகிழ்ச்சி

கோவி.கண்ணன் said...

காஞ்சனா அம்மா,

இங்கே இருக்கும் குறிப்பு படி செய்து பார்த்தேன், நன்றாக இருந்தது.

சென்னை ஹோட்டல் வடைகறி, எண்ணைப் பிரிந்து இருக்கும், அது போல் எனக்கு செய்யத் தெரியவில்லை.

Kanchana Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
சென்னை ஹோட்டல் வடைகறி, எண்ணைப் பிரிந்து இருக்கும், அது போல் எனக்கு செய்யத் தெரியவில்லை//

அரைத்த மாவை எண்ணைய் விட்டு வதக்கும்போது தேவையைவிட சற்று தாராளமாக,காரக்குழம்புக்கு
செய்வதுபோல் எண்ணைய் விட்டால் பிரிந்து வரும்.

Unknown said...

senji parthen superb.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...