Tuesday, October 28, 2008

சுகியன்

தேவையானவை:

பூரணம் தயாரிக்க:

கடலைபருப்பு 1 கப்
வெல்லம் 1 கப் (பொடி செய்தது)
முந்திரிபருப்பு 10
தேங்காய் துருவல் 3/4 கப்
ஏலப்பொடி 2 டீஸ்பூன்
நெய் தேவையானது

மேல்மாவு தயாரிக்க:

உளுத்தம்பருப்பு 1 1/2 கப்
பச்சரிசி 1 கப்
உப்பு அரை டீஸ்பூன்

செய்முறை:


கடலைபருப்பை குக்கரில் வேகவைக்கவும்.அதனுடன் தேங்காய்துருவல்,பொடிசெய்த வெல்லம்

ஏலப்பொடி சேர்த்து பிசையவும்.வாணலியில் சிறிது நெய் விட்டு பிசைந்த கலவையை போட்டு ஐந்து நிமிடம்
கிளறவும்.ஆறின பின் mixy ல் விழுது போல அரைத்து எடுக்கவும். இதில் உடைத்த முந்திரிபருப்புகளை கலக்கவும்.நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.

அரிசியையும் உளுத்தம்பருப்பையும் அரை மணி நேரம் ஊறவைத்து தனித்தனியே நைசாக அரைத்துஅரை டீஸ்பூன் உப்பு போட்டு கலக்கவும்.
செய்துவைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கிஎடுத்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

3 comments:

துளசி கோபால் said...

வெல்லத்தை, எப்போ, எப்படிச் சேர்க்கணுமுன்னு சொல்ல மறந்துட்டீங்களா?

Kanchana Radhakrishnan said...
This comment has been removed by the author.
Kanchana Radhakrishnan said...

விட்டுப்போன வெல்லத்தை...சுட்டிக்காட்டியதும்...திருத்திவிட்டேன்.,
வருகைக்கு நன்றி

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...