Sunday, January 4, 2009

திருவாதிரை களி

ஆருத்ரா தரிசனம் 10-01-09 அன்று வருகிறது.அன்று செய்யப்படுவது இது.

தேவையானவை:

பச்சரிசி 2 கப்
பயத்தம்பருப்பு ஒரு பிடி
கடலைபருப்பு 1/2 கப்
தண்ணீர் 6 கப்

வெல்லம் பொடித்தது 2 1/2 கப்
துருவிய தேங்காய் 1 கப்
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
ஏலக்காய் 5

செய்முறை:

பச்சரிசி,பருப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணய் விடாமல் சிவக்க வறுத்து மிக்ஸீயில் மூன்றையும் சேர்த்து கரகரப்பாக பொடி ரவையாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 6 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சிறிது கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தைப்போடவேண்டும்.வெல்லம் கரைந்தவுடன்
தேங்காய் துருவலை அப்படியே பச்சையாகப்போட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் விடவேண்டும்.தள தள என்று கொதித்தவுடன் அடுப்பை slim ல் வைத்து அரைத்துவைத்த அரிசி பருப்புரவையை தூவிக்கொண்டே கிளறவும்.பின்னர் மூடிவைத்து அடிக்கடி அடிபிடிக்காமல் கிளறவும். நன்றாக வெந்தவுடன் முந்திரிபருப்பை வறுத்துப்போட்டு மீதமுள்ள நெய்யையும் விட்டு ஏலக்காய் பொடியைியும் போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

இறக்கிய பின் விட்டு விட்டு இரண்டு தடவை கிளறினால் "பொல பொல" என்று உதிர்ந்து வரும்.

அன்று, இதனுடன் குறைந்தது 7 காய்கள் போட்டு கூட்டு செய்வதுண்டு.

6 comments:

கபீஷ் said...

செய்முறை நல்லா இருக்கு. எங்க அம்மா செய்வாங்க. எப்படி செய்யணும்னு இதுவரை கேட்டதில்லை. அந்த கூட்டு பத்தி ஏற்கனவே எழுதியிருக்கீங்களா? இல்லேன்னா இனிமேல் எழுதுவீங்களா ப்ளீஸ்

Kanchana Radhakrishnan said...

அந்த கூட்டு செய்வது எளிது.அடுத்து எழுதிவிடுகிறேன்..
வருகைக்கு நன்றி கபீஷ்

நானானி said...

திருவாதிரைக்களி நல்லாவே கிண்டியிருக்கிறீங்க. இதே போல் 10-ஆம் தேதி செய்து பார்க்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி நானானி

மாதேவி said...

நாங்கள் சாதாரண உழுத்தங் களி, குரக்கன் களி போன்றவை செய்வதுதான் வழக்கம். திருவாதிரைக் களி செய்முறை எனக்குப் புதிதாக இருக்கிறது. நன்றி

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மாதேவி

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...