Wednesday, June 17, 2009

தக்காளி சாதம்




தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
தக்காளி 5
பச்சைப்பட்டாணி 1/2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 3
சாம்பார் பொடி 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் ,நெய் தேவையானது
-----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----

செய்முறை:

1.பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வீதம் 40 நிமிடம் ஊறவைத்து குக்கரில் வைக்கவும்.
பின்னர் சாதத்தை ஒரு அகண்ட தட்டில் ஆறவைக்கவும்.
2.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
3.பச்சைமிளகாயை குறுக்குவாட்டில் கீறவும்.
4.தக்காளியை வென்னீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து தோலுரித்து விழுதாக அரைக்கவும்.
5.முந்திரிபருப்பை நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
6.வெந்தயத்தை எண்ணைய் விடாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
----
1,வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் வதக்கவும்.
2.வெங்காயம் பொன்னிறாமாக வதங்கியதும் தக்காளி விழுது,பட்டாணி,உப்பு,சாம்பார் பொடி,மசாலா பொடி ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.
3.ஆறவைத்துள்ள சாதத்தில் கலக்கவும்.
4.வறுத்த முந்திரிபருப்பை சேர்க்கவும்.
5.கடைசியாக பொடி பண்ணிய வெந்தயத்தை தூவவும்.

2 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

எல்லாம் சரீங்க்கா..
அது என்ன சாப்பாட்டுக்கு பக்கத்தில முட்டைக்கு பெயிண்ட் அடிச்சு வைச்சிருக்கீங்க?

Kanchana Radhakrishnan said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
எல்லாம் சரீங்க்கா..
அது என்ன சாப்பாட்டுக்கு பக்கத்தில முட்டைக்கு பெயிண்ட் அடிச்சு வைச்சிருக்கீங்க?//

:-)))

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...